8 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பத்திற்கு பிறகு வழக்கத்தை விட உடல் எடை கூடி காணப்படுவோம். இதனை குறைக்க என்ன வழி? எடையை குறைக்க தாய்ப்பால் எப்படி உதவுகிறது?
தாய்ப்பால் தருவதால் நமக்கு பலவித நன்மைகள் கிடைக்கிறது என்பது உண்மை. அவற்றுள் ஒன்று தான் எடை இழப்பு. பெரும்பாலான பெண்களுக்கு பிரசவத்தின்போது அதிக எடை போட்டிருக்கும். இதனை எப்படி குறைத்து இழந்த அழகை மீண்டும் பெறுவதென குழப்பத்துடன் இருப்பார்கள். தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்பார்கள். ஆனால், தாய்ப்பால் கொடுப்பதால் நாம் கூடிய எடை குறைந்து நம்மால் இயல்பு நிலைக்கு திரும்பலாம். இது குறித்து அறிவியல் என்ன சொல்கிறது என்பதை இந்த சுவாரஸ்யமான பதிவில் நாம் காண்போம் வாருங்கள்.
தாய்ப்பால் தருவதால் நம்முடைய எடை எப்படி குறையும்?
தாய்ப்பால் தருவதால் நாம் இயற்கையாகவே எடையை இழக்க வாய்ப்பு கிடைக்கிறது. இதற்கு முக்கியமான காரணம், தாய்ப்பால் தரும் அம்மாக்கள் தினமும் அதிக கலோரிகளை இழப்பதாலே.
ஆனாலும், தாய்ப்பால் தருவதனால் எடை குறைய நாம் உண்ணும் உணவையும் கருத்தில் கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பதை குறைத்து, நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நாம் ஆரோக்கியமான உணவை உண்ணும்போது நம்முடைய உடல் எடை இயல்பு நிலைக்கு திரும்ப, தாய்ப்பாலும் நிச்சயம் நமக்கு உதவுகிறது.
தாய்ப்பால் தந்தும் உடல் எடை குறையவில்லையே ஏன்?
தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு அதிகமாக பசி எடுக்கிறது. அப்போது அவர்கள் ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். அதை விடுத்து கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை உண்ணும்போது இது எந்த விதத்திலும் நம் உடல் எடையை குறைக்க உதவாது.
அதேபோல, நம்முடைய தூக்கமும் உடல் எடை கூட/குறைய முக்கியமான காரணம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்.
தாய்ப்பால் தரும் அம்மாக்கள் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை குறைப்பது எப்படி?
தாய்ப்பால் தருவதால் கிடைக்கக்கூடிய மற்ற பலன்கள் என்னென்ன?
தாய்ப்பால் தருவதால் உடல் எடை குறையுமென்றாலும், அதற்கு முறையான உணவுப்பழக்க வழக்கமும் நமக்கு தேவைப்படுகிறது. தாய்ப்பால் தருவது நம்முடைய பிள்ளைகளை எண்ணற்ற வழிகளில் பாதுகாத்து பலவித நோய்களில் இருந்து காக்கிறது.
தாய்ப்பால் கொடுத்து வந்து, ஆரோக்கியமான உணவு முறையையும் கடைப்பிடித்து வாருங்கள். அதோடு மருத்துவர்கள் ஆலோசனை பெற்று ஒரு சில உடற்பயிற்சியும் செய்துவர, நிச்சயம் நம் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. நம்முடைய பிள்ளைகளின் ஆரோக்கியமும் மேம்படும். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
Content Image Source: Shutterstock
A