தாய்ப்பால் தருவதால் புற்றுநோய் வருவது எவ்வாறு தடுக்கப்படுகிறது?

cover-image
தாய்ப்பால் தருவதால் புற்றுநோய் வருவது எவ்வாறு தடுக்கப்படுகிறது?

தாய்ப்பால் தருவதால் பிள்ளைகளுக்கு எண்ணற்ற நன்மைகள் உண்டு என்பதை கேள்விப்பட்டிருப்போம். இதை தவிர நமக்கும் சிசேரியன் அல்லது சுகப்பிரசவத்துக்கு பிறகு தாய்ப்பால் தருவதால் எண்ணற்ற நன்மைகள் உண்டு என கூட மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால், தாய்ப்பால் தருவதால் மார்பக புற்றுநோய் வருவது தடுக்கப்படுகிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இதனை பல ஆய்வுகள் கூறுகிறது. இருப்பினும், இது குறித்த நேரடி பதில் எந்த ஆய்விலும் கிடைக்கவில்லை. வேறு என்னவெல்லாம் ஆய்வின் மூலம் தெரிய வருகிறது என்பதை நாம் இப்போது பார்ப்போம் வாருங்கள்.

 

எப்படி தாய்ப்பால் தருவதால் மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது?

இதற்கு பலவித உதாரணங்கள் கூறப்படுகிறது, அவற்றுள் ஒன்று தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி குறைவாக இருக்குமாம். இந்த காரணத்தால் எஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் மார்பக புற்றுநோய் வருவது தடுக்கப்படுவதாகவும் ஆய்வின் ஒரு பகுதி விளக்குகிறது.

இன்னொரு ஆய்வில், தாய்ப்பால் தருவதால் மார்பக செல் உருவாகுகிறதாம். இது வரக்கூடிய மார்பக புற்றுநோயை தடுக்க உதவுவதாகவும் ஆய்வு கூறுகிறது.

ஆனால், ஆரோக்கியமான விவாதமாக அமையும் ஒரு ஆய்வு இது தான். அதாவது தாய்ப்பால் தரும் பெண்கள், சத்தான உணவை மட்டுமே எடுத்துக்கொள்கின்றனர். இதனால் தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு மிக குறைவு என்ற ஆரோக்கியமான விவாதத்தையும் முன் வைக்கிறது.

 

ஆய்வுகள் வேறு என்னவெல்லாம் கூறுகிறது?

இன்றைய சமுதாயத்தில் தாய்ப்பால் தரும் அம்மாக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துக்கொண்டே வருகிறது. இவ்வாறு தாய்ப்பால் கொடுப்பதை குறைக்கும்போது தாய் மற்றும் பிள்ளைக்கு பல வித உபாதைகளை இதனால் ஏற்படுத்துகிறது. சிலருக்கு மார்பக புற்றுநோய், சர்க்கரை வியாதி என பல சிக்கலான வியாதிகளும் இதனால் வருவதாக ஆய்வு கூறுகிறது.

 

உலக சர்வதேச புற்றுநோய் ஆய்வு மையம் கூறுவது என்ன?

ஒரு பெண் ஒரு வருடத்திற்காவது தாய்ப்பால் கொடுத்து வந்தால், மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்பு 5% ஆக குறையும் என்கிறது. இதற்கு காரணம், நீண்ட நாட்கள் தாய்ப்பால் கொடுத்து வரும்போது, பாலை உற்பத்தி செய்யும் ஹார்மோன் அளவு அதிகம் காணப்படுவதாக கூறுகிறது. இதனால் மார்பகத்துக்கு பாதுகாப்பை அளித்து மார்பக புற்றுநோய் வளர்ச்சியடையாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்வதாகவும் இந்த ஆய்வு மையம் கூறுகிறது.

ஆனாலும், தாய்ப்பால் தரும் அம்மாக்களுக்கு இந்த பிரச்சனை முற்றிலும் வரவே வராது என்றும் கூற முடியாது எனவும், இது போன்ற அறிகுறிகள் ஏதாவது காணப்படுகிறதா என்பதை குறித்து மருத்துவர்களிடம் எப்போதும் கலந்தாலோசிக்க வேண்டுமெனவும் ஆய்வு மையம் எச்சரிக்கிறது. ஆம், ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம், மார்பகத்தை முறையாக பேணி பாதுகாக்காமல் போகுதல் போன்ற சூழல்களினாலும் சிக்கல் வரலாம் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவும்.

 

தாய்ப்பால் தரும்போது வேறு என்னவெல்லாம் அசவுகரியம் உண்டாகலாம்?

இரத்தநாள வீக்கம்

தாய்ப்பால் தரும் ஆரம்ப காலக்கட்டத்தில், அதிகமாக தாய்ப்பால் சுரக்க வாய்ப்புள்ளது. அப்போது வரும் பிரச்சனை தான் இரத்தநாள வீக்கம். நம்முடைய பிள்ளைகளுக்கு போதுமான அளவு தாய்ப்பால் தருவதை நாம் உறுதிசெய்ய வேண்டும்.

 

பால் கட்டிப்படுதல்

தாய்ப்பால் தரும்போது ஒருவகையான சிறப்பு செல்கள் மார்பகத்தில் உற்பத்தியாகும். நாம் முறையாக தாய்ப்பால் தராமல் இருக்கும்போது பால் கட்டிப்பட வாய்ப்புள்ளது. இதனால் மார்பகத்தில் புண் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு சரியான இடைவெளியில் தாய்ப்பால் தரும்போதும், மார்பகத்தை மசாஜ் செய்யும்போதும், ஒத்தடம் தரும்போதும் இந்த பிரச்சனை குறைய வாய்ப்புள்ளது.

 

முலையழற்சி

இது மார்பகத்தில் வரக்கூடிய ஒருவித தொற்றாகும். இப்பிரச்சனையின்போது ஏற்படக்கூடிய அறிகுறிகளை நாம் இப்போது காண்போம். அவை,

  • மார்பகம் சிவந்து இருத்தல்
  • காய்ச்சல் அடித்தல்
  • உடல்நிலை சரியில்லாதது போல் உணர்தல்

 

எப்போது மருத்துவரிடம் செல்வது?

  • வெகுநாட்களுக்கு இருந்தால்
  • வளர்ந்துக்கொண்டே இருப்பது போல தெரிந்தால்

தாய்ப்பால் என்பது அமிர்தம் போன்றது. அதனை சரியான இடைவெளியில் நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும்போது பல வித ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது. மார்பகத்தை முறையாக பாதுகாப்பதன் மூலம் நமக்கும் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திப்போம், நன்றி, வணக்கம்.

Content Image Source: Shutterstock

#breastfeeding #breastcancer #momhealth
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!