கூட்டு குடும்பத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

cover-image
கூட்டு குடும்பத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

கூட்டு குடும்பத்தில் கர்ப்பிணி பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

முன்பெல்லாம் எல்லோருமே கூட்டு குடும்ப சூழலில் தான் இருந்து வந்தார்கள். ஆனால் இப்போது நிலை தலைகீழாக மாறியுள்ளது. கூட்டு குடும்பத்தை காட்டிலும் தனிக்குடும்பம் செல்பவர்கள் தான் அதிகம். அதனால் கர்ப்பமாக இருக்கும்போதும், பிள்ளைகள் வளர்ப்பிலும் பலவித கடினங்களை சமாளித்து செல்ல வேண்டியுள்ளது. கூட்டு குடும்பமே பரவாயில்லை என நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் சொல்ல வேண்டுமென்றால், இரண்டிலுமே நிறை, குறைகள் இருக்கத்தான் செய்கிறது. கூட்டு குடும்பத்தில் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும்? அதனை எப்படி எல்லாம் கர்ப்பிணிகள் சமாளிப்பது என்பதை நாம் இப்போது காண்போம்.

 

என்ன மாதிரியான சிக்கல்கள் வரலாம், எப்படி நாம் சமாளிப்பது?

1. கூட்டு குடும்பத்தில் இருக்கும்போது குடும்ப மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் மிகுந்த கவனத்தோடு நாம் இருக்க வேண்டும். இப்போது முடிந்தளவுக்கு பிரச்சனைகளை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நாம் செல்வது நல்லது.

2. கூட்டு குடும்பத்தில் ஆளுக்கொரு அட்வைஸ் கொடுப்பார்கள். கர்ப்பிணிகளுக்கு இது சங்கடமான விஷயமே. அதனால், முடிந்தளவுக்கு மருத்துவர்களிடம் பரிந்துரை பெற்று அதன்படி செயல்படுவது நல்லது. ஒவ்வொருவர் கூறுவதையும் ஏற்றுக்கொள்வதோடு நிறுத்திக்கொள்ளுங்கள். அதனை முயற்சி செய்வதற்கு முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிடுவது நல்லது. காரணம் என்னவென்றால், பெண்களின் உடல் எப்போதும் எல்லோருக்கும் ஒரே போல இருப்பதில்லை. உதாரணமாக, கர்ப்பமாக இருக்கும்போது எல்லோருக்கும் வாந்தி, குமட்டல், மயக்கம் இதெல்லாம் இருக்க வேண்டுமென அவசியமும் இல்லை. நம்முடைய உடலை பொறுத்தே அறிகுறிகளும் மாறும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3. உங்கள் வீட்டில் ஏதாவது யோசனைகள் சொன்னால், அதனை உங்களின் நெருக்கிய வட்டாரத்தில் உள்ள மருத்துவரிடம் மறு பரிசீலனை செய்துக்கொள்ளலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் சொல்லும்போது அதற்கு மறுப்பு தெரிவித்தாலும் மன ஸ்தாபம் வர வாய்ப்புள்ளது.

4. கண்டிப்பாக உறவினர்கள் வீட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து மருத்துவர் ஆலோசனை நமக்கு இப்போது வேண்டும். அதிலும், துக்கம் போன்ற நிகழ்வுகளில், கலந்துக்கொள்ள முயல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

5. மருத்துவமனைக்கு செல்வதை தவிர்த்து வேறு எங்கேயும் செல்ல முயல வேண்டாம். இது நம்முடைய உடல் நிலை பொறுத்து ஒரு சில விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

6. வீட்டில் ஏதாவது சண்டை, சச்சரவு என்றாலும் அதனில் கலந்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. தேவையற்ற மன அழுத்தம் இப்போது நமக்கு கூடவே கூடாது. சண்டைகள் எப்போதும் நிரந்தமானது அல்ல. தேவையில்லாமல் அவற்றில் தலையிட்டால் நமக்கு மன அழுத்தமே மிச்சம் என்பதை நினைவில் கொள்ளவும்.

 

எப்படி தனிமையில் நேரத்தை செலவிடுவது?

தனிமையில் செலவிட வேண்டிய அவசியம் இருப்பதில்லை. நம்மை போலவே நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்களும் பிள்ளையின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதால், அவர்களுடன் நம்முடைய நேரத்தை நாம் மகிழ்ச்சியாக செலவிடலாம். கீழ்காணும் யோசனைகளை முயன்று பார்க்கலாமே.

  • உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்காக பணிவிடைகளை செய்யும்போது மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளுங்கள்.
  • அவர்களுடைய முக்கியத்துவத்தை பற்றி அடிக்கடி பேசிய வண்ணம் இருங்கள், மகிழ்வார்கள்.
  • பிள்ளைகள் பிறந்த பின்பும் அவர்களை குளிப்பாட்டுவது, மசாஜ் செய்வது போன்ற பொறுப்புக்களை வீட்டில் உள்ளவர்களிடம் ஒப்படைப்பது குறித்து இப்போதே பேசலாம். இது அவர்கள் மீது நாம் வைத்திருக்கும் மரியாதையையும், நம்பிக்கையையும் உணர்த்தும்.
  • முடிந்தளவு வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்களும் அதனில் ஒருவராக இருக்க பாருங்கள்.

கர்ப்பம் என்பது மிகப்பெரிய வரம். அதனை நாம் நம்முடைய குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட வேண்டும். எப்போதுமே குடும்பத்தில் சந்தோசம் மட்டுமே இருக்குமென்று சொல்லிவிட முடியாது. அதனால், சூழலுக்கு ஏற்றவாறு நாம் இருப்பது நம்முடைய கர்ப்ப காலத்தை மேலும் இனிமையாக்கும். மீண்டுமொரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம். 

 

Content Image Source: Shutterstock

#momhealth #careerandmotherhod #familyandrelationship
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!