பிள்ளைகளுக்கு திட உணவு கொடுப்பது குறித்த பயனுள்ள தகவல்

cover-image
பிள்ளைகளுக்கு திட உணவு கொடுப்பது குறித்த பயனுள்ள தகவல்

திட உணவு கொடுக்க தொடங்கியாச்சா? இன்னும் இல்லையா? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

ஆறு மாதங்கள் வரைக்கும் நாம் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் கொடுத்து வருவோம். ஆறு மாதங்களுக்கு பிறகு பல பிள்ளைகள் திட உணவை உண்ண தயாராகி விடுகின்றனர்.

 

திட உணவு என்றால் என்ன?

நாம் தரும் தாய்ப்பால் மட்டுமே ஆறு மாதங்களுக்கு பிறகு போதாது. அதனால் நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு சில திட உணவை கொடுக்கவும் நாம் தொடங்குவோம். என்ன மாதிரியான திட உணவை எல்லாம் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு எப்போது கொடுக்கலாம் என்பதை வாருங்கள் பார்ப்போம்.

 

திட உணவு எப்போது கொடுக்கப்படும்?

ஆறு மாதங்களில் நம்முடைய பிள்ளைகளின் செரிமான மண்டலம் திட உணவை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கக்கூடும். இப்போது தான் உணவை மென்று எப்படி சாப்பிடுவது என்பதையும் நம்முடைய பிள்ளைகள் கற்றுக்கொள்கிறார்கள்.

 

எப்படி திட உணவை என் பிள்ளைக்கு கொடுப்பது?

இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு உணவை மசித்தோ, கூழாகவோ, வேக வைத்தோ கொடுக்கலாம். முதலில் பழங்கள் கொடுக்க தொடங்கலாம். அதன்பிறகு வேகவைத்த பருப்பு உணவு, அதன்பிறகு சாதம், ராகி என அவர்கள் செரிமான மண்டலத்துக்கு ஏற்ற வகையில் கொடுத்துக்கொண்டிருக்கலாம். இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுக்கலாம். இதனால், அந்த உணவு ஒவ்வாமை ஏற்படுத்துகிறதா? இல்லையா? என்பதை நம்மால் அறிந்துக்கொள்ள முடியும். உணவில் உப்போ அல்லது இனிப்போ சேர்க்க வேண்டாம். ஒரு டீஸ்பூனில் கொஞ்சமாக கொடுத்து முதலில் பாருங்கள். ஒருவேளை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால், கட்டாயப்படுத்த வேண்டாம்.

 

எவ்வளவு நான் இப்போது கொடுக்கலாம்?

ஆறு மாதங்களில் ஒரு நாளைக்கு ஒரு டேபிள்ஸ்பூன் விதம் கொடுத்தால் போதும்.

 

திட உணவை சாப்பிட தயாராகிவிட்டதை எப்படி அறிவது?

கீழ்காணும் அறிகுறிகள் நம்முடைய பிள்ளைகளிடம் காணப்படலாம். அவை,

 

  • அவர்கள் தலையை தூக்கி பார்க்க செய்வார்கள்
  • பிறந்ததை விட இப்போது இரண்டு மடங்கு எடை அதிகமாக காணப்படலாம்
  • நாம் உண்ணுவதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்த வண்ணம் இருப்பார்கள்

 

என்ன உணவை நாம் இப்போது அவர்களுக்கு கொடுக்கலாம்?

 

நாம் இப்போது கொடுக்கும் உணவுகளில் கூடுதல் கவனத்தோடு இருத்தல் வேண்டும். முதன் முதலில் நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு திட உணவை கொடுக்க நினைத்தால் சர்க்கரைவள்ளிக்கிழங்கை கொடுக்கலாம். இது நம்முடைய பிள்ளைகளுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல பழங்கள், காய்கறிகள் என மசித்து நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு இப்போது கொடுக்கலாம். நாம் அவர்களுக்கு கொடுக்கும் உணவு, கெட்டியாக இருத்தல் கூடாது. அவர்கள் மென்று திங்க ஏற்ற வகையில் இருத்தல் வேண்டும்.

 

என்ன உணவை நாம் இப்போது தவிர்க்கலாம்?

தேன்

தேனில் ஒருவிதமான பாக்டீரியா இருப்பதால், இதனை நாம் இப்போது நம்முடைய பிள்ளைகளுக்கு கொடுக்க கூடாது. ஒரு வருடத்திற்குள் நம்முடைய பிள்ளைகளுக்கு தேன் கொடுப்பதை தவிர்க்கவும்.

 

பால்

பாலை நம்முடைய பிள்ளைகளால் இப்போது ஜீரணிக்க கடினமாக இருக்கும். அதனால் முதல் வருடம் முழுவதும் தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் மட்டுமே கொடுக்க வேண்டும். பசும்பாலை நம்முடைய பிள்ளைகளுக்கு ஒரு வருடம் கழித்து வேண்டுமென்றால் அறிமுகம் செய்யலாம்.

 

மீன்

ஒரு வயதிற்குள் மீன் சாப்பிட அவர்களால் முடியாது. காரணம், இதனில் மெர்குரி உள்ளது. நம்முடைய பிள்ளைகளுக்கு மீன் இப்போது ஜீரணிக்க சிரமத்தை ஏற்படுத்தும். ஒரு வருடம் கழித்து மருத்துவர் ஆலோசனை பெற்று மெல்ல மீனை நாம் அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

 

சிட்ரஸ் பழங்கள்

எட்டு மாதங்கள் வரைக்கும் இந்த பழங்களை நம்முடைய பிள்ளைகளுக்கு தரக்கூடாது. ஒருவேளை எட்டு மாதம் கழித்து நீங்கள் தர நினைத்தால், உங்களின் மருத்துவர் ஆலோசனையை ஒரு முறை பெறுவது நல்லது.

 

முட்டையின் வெள்ளைக்கரு

பிள்ளைகளுக்கு முட்டையின் வெள்ளைக்கரு இப்போது அலெர்ஜியை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் வேண்டும்.

காய்கறிகளை வேகவைக்காமல் கட்டாயம் கொடுக்க வேண்டாம். இல்லையேல் அவர்கள் தொண்டையில் அடைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.

ஆறு மாதத்தில் பிள்ளைகளுக்கு திட உணவுகளை கொடுக்கும் முன்பு மருத்துவரிடம் ஒரு முறை கலந்துரையாடுவது நல்லது. மீண்டுமொரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

Content Image Source: Shutterstock

#babyfoods #solidstarts #babyweaning
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!