சுட்டித்தனம் செய்யும் பிள்ளையை சமையல் கலையில் சேர்த்துக் கொள்வது எப்படி?

cover-image
சுட்டித்தனம் செய்யும் பிள்ளையை சமையல் கலையில் சேர்த்துக் கொள்வது எப்படி?

சமையல் செய்ய நம்முடைய பிள்ளைகளின் உதவியை பெறுவது எப்படி? இது எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வை எப்படி பிரகாசமாக்கும்?

 

நம்முடைய பிள்ளைகளின் சிறு வயதிலேயே அன்றாட தேவைகள் குறித்த ஆர்வத்தை தூண்டுவது நல்லது. இதனால் அவர்கள் பல விஷயங்களை கற்றுக்கொள்ள வாய்ப்பை பெறுகின்றனர். அதோடு, நம்முடைய பிள்ளைகளை சமையலில் ஈடுபடுத்தும்போது தேவையற்ற செலவுகள் செய்வதை குறைக்க தொடங்குவர். உணவை வீணடிக்காமல் சுத்தமாக சாப்பிடவும் கற்றுக்கொள்கின்றனர். இது போல பல சுவாரஸ்யமான தகவலை இப்பதிவு உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறது.

 

சமையலில் பிள்ளைகளை ஈடுபடுத்த 10 அற்புதமான வழிகள்

1. சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்க அவர்களையும் அழைத்து செல்லுங்கள். குறிப்பாக, காய்கறி, பழம், இறைச்சி வாங்கும்போது அவர்களை உடன் அழைத்து செல்லலாம்.

2. சமையல் புத்தகங்களை அவர்களுடன் சேர்ந்து வாசிக்கலாம். அதேபோல, குட்டி குட்டி சமையல்களை செய்ய அவர்களை நாம் ஊக்குவிக்கலாம்.

3. அவர்கள் வயதுக்கு ஏற்ற வேலைகளை மட்டுமே கொடுக்கவும். அவர்கள் வயதுக்கு மீறிய வேலைகளை கொடுக்கும்போது போர் அடிக்க தொடங்கிவிடும்.

4. அவர்களுடன் சேர்ந்து உணவை சுவைத்து மகிழுங்கள். அந்த உணவின் கலர், வடிவம், சுவை போன்றவை குறித்து அவர்களுடன் பேசலாம்.

5. அவர்களின் சிறு வயதிலேயே விதவிதமான அளவு கரண்டியை கொடுத்து சமையல் ஆர்வத்தை நாம் அவர்களுக்கு தூண்டலாம்.

6. அவர்களுக்கான பொம்மை சமையல் செட் ஒன்றை வாங்கி கொடுத்தும் சமையல் ஆர்வத்தை இப்போதே அவர்களுக்கு வரவைக்கலாம்.

7. வார விடுமுறைகளில், அவர்களுக்கு குட்டி குட்டி சமையல் புராஜெக்டுகளை கொடுத்து அவற்றை சரியாக செய்தாலும், தவறாக செய்தாலும் கைத்தட்டி உற்சாகப்படுத்தலாம்.

8. வீட்டிலேயே காய்கறி செடி, துளசி, குரோட்டன்ஸ் போன்றவை வைத்து அவற்றின் பயன்பாட்டை சொல்லி வளர்க்கலாம்.

9. சீசனல் பழங்கள் மற்றும் காய்கறிகள் எவை என்பதை, மார்க்கெட்டுக்கு அழைத்து செல்வதன் மூலம் அவர்களுக்கு நாம் புரிய வைக்கலாம்.

10. வீட்டிற்கு காய்கறி, மளிகை சாமான்கள் வாங்கி வரும்போது அவற்றை பரப்பி கடை வைத்து விளையாட ஊக்குவிக்கலாம். இது அவர்கள் பல வித புதிய பெயர்களை அறியவும் உதவுகிறது.

 

கடைக்கு அழைத்து செல்ல சூப்பர் டிப்ஸ்

1. அவர்களுடன் அமர்ந்து தேவையானவை குறித்த பட்டியலை உருவாக்கலாம்.

2. பிள்ளைகளுக்கு என்ன வேண்டுமென்பதை கேட்டு அதனை பட்டியலில் சேர்த்துக்கொள்ளவும். அதனை மார்க்கெட்டில் கண்டுபிடிக்க அவர்களிடமே பொறுப்பை ஒப்படைத்து ஊக்குவிக்கலாம்.

3. நாம் மார்க்கெட்டில் கூடையில் வைக்கும் ஒவ்வொரு பொருளையும், அதன் பெயரை உச்சரித்தபடியே இருக்கலாம்.

4. பாக்கெட்டுகளில் எதனை எல்லாம் நாம் பார்த்து வாங்க வேண்டுமென்பதை வேடிக்கையாக அவர்களுக்கு காட்டலாம்.

5. நம்முடைய பிள்ளைகள் புரிந்துக்கொள்ளும் தன்மையுடையவராக இருந்தால், பட்டியலை படிக்க தெரிந்திருந்தால், அவர்களிடம் பாதி பட்டியலை கொடுத்து பொருட்களை எடுத்து கூடையில் போட சொல்லலாம். உங்கள் கண் பார்வையில் இந்த செயல் இருக்க வேண்டும்.

6. புதிதாய் படிக்க பழகியவர்களை, அந்த பொருளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை படிக்க சொல்லி செயல்பாட்டை வேடிக்கையாக்கலாம்.

7. பொருட்களை வாங்க வைத்திருக்கும் கூடையை கடைக்கு செல்லும்போது அவர்களிடமே கொடுத்து கொண்டு வர சொல்லலாம். இதனால், அவர்களுடைய ஷாப்பிங் செய்யும் ஆர்வம் அதிகமாகிறது.

8. அவர்களை எப்போதும் அவசர அவசரமாக அழைத்துக்கொண்டு செல்லவோ, அவசர அவசரமாக திரும்பி அழைத்து வரவோ கூடாது. அவர்கள் அங்குள்ளவற்றை ஆராய போதிய நேரத்தை நாம் கட்டாயம் தர வேண்டும்.

 

இது போன்ற செயல்பாடுகளை நாம் நம்முடைய பிள்ளைகளிடம் செய்வதால், நிச்சயம் அவர்கள் நமக்கு சமையல் செய்யும்போது ஒத்தாசையாக இருப்பார்கள். இந்த பதிவு பிடித்திருந்தால் பகிரலாமே. மீண்டும் ஒரு சுவாரஸ்யமான பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#momhack #boostingchilddevelopment #parentinggyaan
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!