பிள்ளைகள் தானாக மலம் கழிக்க தர வேண்டிய பயிற்சிகள்

cover-image
பிள்ளைகள் தானாக மலம் கழிக்க தர வேண்டிய பயிற்சிகள்

பிள்ளைகளுக்கு மலம் கழிக்க கற்று தர தயாரா? என்னவெல்லாம் நாம் கவனிக்க வேண்டும்? எப்படி இதனை கற்றுக்கொடுப்பது?

நம்முடைய பிள்ளைகள் வளரும்போது பலவித செயல்பாடுகளை தானாக செய்ய ஆசைப்படுகின்றனர். அவற்றுள் ஒன்று தான் தானாக மலம் கழிக்க தொடங்குவது. இதுவரை நம்முடைய பிள்ளைகள், நம் உதவியுடன் மலம் கழித்திருக்கலாம். ஆனால் 18 முதல் 24 மாதங்களில் அவர்கள் இந்த பழக்கத்தை கற்றுக்கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஒரு சில பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ள சிரமமாக இருக்க, மூன்று வயதில் கூட இதனை முழுமையாக கற்றுக்கொள்ளலாம். இது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.

 

மலம் கழிக்க நம்முடைய பிள்ளைகளை பழக்குவது எப்படி?

1. நம்முடைய பிள்ளைகள் ரெடியா

அவசரப்பட்டுக்கொண்டு அவர்களுக்கு மலம் கழிக்க பழக்க வேண்டாம். அவர்கள் அதற்கு தயாரா என்பதை அறிந்து அதன்படி நாம் செயல்பட வேண்டும்.

 

2. பிடித்த வகை மலம் கழிக்கும் தொட்டி

‘பாட்டி’ (Potty) எனப்படும் மலம் கழிக்கும் தொட்டியை அவர்களுக்கு பிடித்தவாறே நாம் வாங்க வேண்டும். அப்போது தான் தானாக மலம் கழிக்கும் ஆர்வம் அவர்களுக்கு வரும்.

 

3. படம் போட்ட கால்சட்டை

அவர்களுக்கு கார்ட்டூன் வரைந்த கால்ச்சட்டையை நாம் இப்போது தேர்வு செய்யலாம். அவர்கள் சரியான முறையில் மலம் கழிக்க தொடங்கும்போது இன்னும் விதவிதமான கார்ட்டூன் போட்ட கால்ச்சட்டையை நாம் அவர்களுக்கு வாங்கி தந்து ஊக்குவிக்கலாம்.

 

4. தொட்டியை வைக்குமிடம்

மலம் கழிக்கும் தொட்டியை வைக்கும்போது அவர்களுக்கு ஏற்ற வகையில் வைக்க வேண்டும். அப்போது தான் அலுப்புப்படாமல் செல்வார்கள். பாத்ரூமில் வைத்தால் அவர்களுக்கு சிரமமாக இருக்கலாம். அதனை விட அவர்கள் தூங்கி எழும் இடத்தின் அருகாமையில் மலம் கழிக்கும் தொட்டியை வைக்க பார்க்கலாம்.

 

5. மலம் கழிக்க நேரம்

அவர்கள் மலம் கழிக்க கற்றுக்கொண்ட பிறகு தினமும் எப்போது மலம் கழிக்க வேண்டுமென்பது குறித்த அட்டவணை ஒன்றை போட்டு அவர்களை அதற்கு ஏற்ற வகையில் பழக்கப்படுத்துங்கள். ஒரு சில பிள்ளைகள் சாப்பிட்டவுடன் அவசர அவசரமாக மலம் கழிக்க ஓடுவார்கள். ஆனால், இது சரியான நடைமுறை இல்லை. காலை எழுந்தவுடன் மலம் கழிக்க பயிற்சி தருவதனால், அவர்கள் தினமும் சரியாக மலம் கழிக்க தொடங்குகிறார்கள். ஒரு சில பிள்ளைகளுக்கு சாப்பிட்டவுடன் மலம் கழிப்பதால், சத்துக்கள் சென்று சேராமலும் இருந்துவிடுகிறது.

 

6. ஸ்டிக்கர் பரிசு

அவர்கள் சரியாக தினமும் மலம் கழிக்கும்போது, நாம் அவர்களுக்கு ஸ்டிக்கரை பரிசாக கொடுக்கலாம்.

 

7. பாடல் பிளே செய்தல்

அவர்கள் மலம் கழிக்க சிரமம் கொண்டால், ஏதாவது அவர்களுக்கு பிடித்த பாடலை போட்டு விடலாம். இதனால், அவர்கள் அசவுகரியம் இல்லாமல் மலம் கழிக்க தொடங்குகின்றனர். அதேபோல அந்த பாடலை தினமும் அதே நேரத்தில் நீங்கள் பிளே செய்யும்போது இது மலம் கழிப்பதற்கான நேரமென்பதை கொஞ்சம் கொஞ்சமாக உணர தொடங்குவார்கள்.

 

8. கட்டி பிடித்து முத்தம் தரலாம்

நம்முடைய பிள்ளைகள் முறையாக மலம் கழித்து நாம் சொன்னதை செய்யும்போது, அவர்களை பாராட்டுங்கள். அதோடு கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தவும் செய்யலாம்.

 

9. புத்தகம் படித்தல்

அவர்கள் மலம் கழிக்கும்போது புத்தகத்தை கொடுத்து அசவுகரியத்தை குறைக்கலாம். இந்த பழக்கம் வரும்போது, அவர்களாகவே புத்தகத்தை எடுத்துக்கொண்டு மலம் கழிக்க சென்றுவிடுவார்கள்.

 

10. தூங்க செல்லும் முன்

எப்போதும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு டாய்லெட் செல்லும் பழக்கத்தை நம்முடைய பிள்ளைகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அதேபோல காலையில் எழுந்ததும் மலம் கழிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

 

11. முன்னுதாரணம்:

அவர்கள் மலம் கழிக்க கற்றுக்கொள்ள தயாராக இருக்கும்போது, எப்படி மலம் கழிப்பது என்பதை நாம் அவர்களுக்கு செய்து காட்டலாம். நம்மை பார்த்து அவர்கள் இந்த பழக்கத்தை எளிதில் கற்றுக்கொள்ள தொடங்குகின்றனர்.

 

பிள்ளைகளுக்கு எப்படி மலம் கழிக்க கற்றுக்கொடுப்பது என்பது குறித்து பல சுவாரஸ்யமான தகவலை நாம் பார்த்தோம். மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்களை எல்லாம் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#pottytraining #boostingchilddevelopment #earlylearning #parentinggyaan
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!