கர்ப்பிணிகள் கார், பைக், விமானம், இரயிலில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமா?

cover-image
கர்ப்பிணிகள் கார், பைக், விமானம், இரயிலில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமா?

இந்த பதிவில் கர்ப்பிணிகள் பயணம் செய்வதற்கு முன்னால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கார், பைக், ஃபிளைட், ட்ரெயின் பயணம் குறித்தவற்றை நாம் பார்க்கவிருக்கிறோம்.

 

கர்ப்பமாக இருக்கும்போது நம்முடைய மருத்துவர் ‘ஓகே’ சொன்னால் மட்டுமே நாம் பயணம் செய்ய வேண்டும். நாம் பயணம் செய்வதற்கு முன்பாக பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கை கட்டாயம் எடுக்க வேண்டும். இப்போது வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை இருக்கலாம். அது குறித்தும் நாம் நம்முடைய மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

 

எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியமாகிறது?

1. தயார்நிலையில் இருத்தல்

நாம் எடுத்து செல்ல வேண்டிய உடைகள், அணிந்து செல்ல வேண்டிய உடை மற்றும் காலணி குறித்து கவனம் வேண்டும். அதேபோல தேவையான மருந்து, மாத்திரைகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளவும். பிரெக்னென்சி பில்லோ, அவசரகால உதவி எண், டாக்டர் எண் என எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

 

2. தவிர்க்க வேண்டிய உணவுகள்

வாயுத்தொல்லை ஏற்படுத்தும் உணவு, கார்பனேட் அடங்கிய குளிர்பானம் போன்றவற்றை கட்டாயம் நாம் தவிர்க்கவும்.

 

3. முன்பே கிளம்புதல்

கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக கிளம்பாமல், முன் கூட்டி புறப்பட்டு செல்லுதல் நல்லது. இதனால், நமக்கு பயணம் செய்ய சவுகரியமாக உள்ளதா? இல்லையா? என்பதை விமான/ரயில் நிலையம் செல்லும் முன்பே நம்மால் அறிய முடிகிறது.

 

4. லக்கேஜ்

நாம் லக்கேஜை தூக்குவதை தவிர்க்கவும். நம் கணவரிடமோ அல்லது வீட்டில் உள்ளவர்களிடமோ லக்கேஜ்களை கொண்டு வரச்சொல்லலாம்.

 

விமானத்தில் பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை எவை?

 • விமானத்தில் பயணம் செய்யும்போது அது கர்ப்பிணிகளுக்கு ஏற்றது தானா என்பதறிந்து டிக்கட் புக் செய்யவும். பல விமான சேவைகள், கர்ப்பிணிகளுக்கு என ஒரு கட்டுப்பாட்டு வரம்பையும் பயணத்திற்காக விதிக்கிறது. அது குறித்து நாம் அறிந்துக்கொண்டு புக் செய்வது நல்லது.
 • அதேபோல நாம் பயணம் செய்யலாம் என்பதற்கான அனுமதி சான்றை மருத்துவரிடம் இருந்தும் நாம் பெற்றிருக்க வேண்டும். அப்போது தான் விமானத்தில் பறக்க அனுமதிக்கப்படும்.
 • கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி டாய்லெட் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பதால், அதற்கான சிறப்பு விமானங்களை புக் செய்வது நல்லது.
 • பயணத்தின்போது நீர்ச்சத்து குறையாமலும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • ஒரே இடத்தில் அமர்ந்திருக்காமல் அவ்வப்போது நடப்பது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும்.

 

காரில் பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை எவை?

 • காரில் கொஞ்ச தூரம் பயணிப்பது மட்டுமே பாதுகாப்பானது.
 • ஒருவேளை நீங்கள் நீண்ட தூரம் பயணிப்பதாக இருந்தால், இடையிடையில் ஓய்வெடுத்து செல்வது நல்லது.
 • கை, கால்களை நீட்டி இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவ வேண்டும்.
 • சீட் பெல்ட்டை போடும்போது, அது நம்முடைய வயிற்றை இறுக்கவில்லை என்பதை கட்டாயம் உறுதிசெய்யவும்.

 

ரயிலில் பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை எவை?

 • நடைமேடை வரை லக்கேஜை கொண்டு வர போர்ட்டர் உதவியை நாம் கேட்கலாம்.
 • ஒவ்வொரு முறை ரயில் நிற்கும்போது கீழே இறங்குவதை தவிர்க்கவும்.
 • கீழ் பெர்த்தை ரயிலில் புக் செய்வது நல்லது. மேலே ஏறி அடிக்கடி இறங்குவது ஆபத்து.
 • ரயிலில் உள்ள டாய்லெட்டை பயன்படுத்தும்போது பேலன்ஸ் கிடைப்பதை உறுதி செய்யவும். இது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும்.

 

பைக்கில் பயணம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை எவை?

 • கர்ப்பிணிகள் பைக்கில் பயணம் செல்வதை தவிர்ப்பது நல்லது.
 • இது நமக்கு பாதுகாப்பானதாக இருப்பதுமல்ல.

 

கர்ப்பிணிகள் தங்களுடைய செல்ல குழந்தையை கைகளில் தாங்கும் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனை விட ஒரு மிகப்பெரிய பொறுப்பு நமக்கு வேறெதுவும் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மருத்துவர் பரிந்துரை மிக மிக அவசியம். மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#pregnancymustknow #pregnancytravel
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!