• Home  /  
  • Learn  /  
  • முந்திரிப்பருப்பு உண்பது உடல் எடையை அதிகரிக்குமா?
முந்திரிப்பருப்பு உண்பது உடல் எடையை அதிகரிக்குமா?

முந்திரிப்பருப்பு உண்பது உடல் எடையை அதிகரிக்குமா?

3 Mar 2020 | 1 min Read

Komal

Author | 138 Articles

பாயாசம், பிரியாணி மற்றும் பல உணவு வகைகளில் சேர்க்கப்படும் ஒரு பொருள் முந்திரிப்பருப்பு. இது பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இது மிகவும் சுவையான பொருள்.

 

இதில் பல விதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. முந்திரி பருப்பில் வைட்டமின் சி, தயாமின், வைட்டமின் பி6, மக்னீசியம், ஜிங்க், காப்பர், இரும்புச் சத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன.

 

முந்திரிப் பருப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் பல தீமைகள் ஏற்படும். சரியான அளவில் சாப்பிட்டால் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். முந்திரிப்பருப்பை சாப்பிட்டால் எடை அதிகரிக்குமா என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

 

பசி ஏற்படாது

முந்திரி பருப்பில் அதிகளவில் நார்ச்சத்து இருப்பதால் நமக்கு நீண்ட நேரம் பசி ஏற்படாது. முந்திரி ஹார்மோனை சமநிலையாக்கி, மெட்டாபாலிசத்தை அதிகரித்து உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகிறது. முந்திரியை நாள் முழுவதும் கூட சிற்றுண்டியாக எடுத்து உங்கள் வயிற்று பசியை போக்கலாம்.

 

எலும்புகள்

எலும்புகள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்க முந்திரிப்பருப்பு உதவுகிறது. முந்திரியை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அதில் உள்ள மக்னீசியம் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

 

நோயெதிர்ப்பு சக்தி

முந்திரிப்பருப்பில் உள்ள காப்பர் மற்றும் இரும்புச் சத்து இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும், ஆரோக்கியமான எலும்பிற்கும், உடற்செயல் பாட்டுக்கும் உதவுகிறது.

 

இரத்த ஓட்டம்

முந்திரி பருப்பில் ஒமேகா-3 , கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை சுத்திகரித்து நல்ல கொழுப்பாக மற்ற வல்லவை. முந்திரியில் உள்ள பொட்டாஷியம், வைட்டமின் -இ , வைட்டமின் -பி மற்றும் போலிக் அமிலம் ஆகியவை இதயத்திற்கும் இரத்த ஓட்டத்திற்கும் புத்துயிர் அளிக்கின்றன. மேலும் தமனி இரத்த குழாயின் உள் சுவரை பலப்படுத்துகிறது.

 

கண்புரை

முந்திரி பருப்பில் லுடீன் உள்ளது. இதில் உள்ள இந்த லுடீன் மற்றும் ஜேக்ஸாந்த்தின் பொருள் வெளிச்சத்தால் கண்கள் பாதிப்படையாமல் காக்கிறது. மேலும் கண்புரை வராமல் தடுக்கிறது.

 

மாதவிடாய்

முந்திரிப்பருப்பை வயது முதிர்ந்த பெண்கள் எடுத்துக்கொண்டால் தங்களது மாதவிடாய் நிற்கும் காலத்தில் உண்டாகும் தூக்கமின்மை நிவர்த்தியாகும். மேலும் முந்திரி பித்தப்பை கட்டிகள் உண்டாகாமல் தடுக்கும்.

 

கொழுப்புகள்

வறுக்கப்பட்ட முந்திரி பருப்பு மிகவும் நல்லது. உப்பு சேர்த்து வறுக்கப்பட்ட முந்திரி பருப்பிற்கு பதிலாக சாதாரணமாக வறுத்த முந்திரிப்பருப்பை உபயோகப்படுத்துங்கள். புரோட்டீனுக்கு பதிலாக முந்திரி பருப்பை ஸ்நாக்ஸ் ஆக எடுப்பது மிக சிறந்தது.

 

இதய ஆரோக்கியம்

முந்திரிப் பருப்பில் மிக குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால் இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள கொழுப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மாரடைப்பில் இருந்து பாதுகாக்கும்.

 

புற்றுநோய் எதிர்ப்பு

தினமும் நாலைந்து முந்திரி சாப்பிடுவதால் இதிலுள்ள தாமிர சத்து புற்று நோயை உண்டாக்கும் செல்களை அழித்து விடுகின்றன. முக்கியமாக குடல் புற்று வராமல் தடுக்கும். மேலும் முந்திரியை இன்னும் ஏராளமான ஆன்டி ஆக்சிடண்டுகள் இருக்கின்றன.

 

தலைமுடி கருமை

முந்திரியை தினசரி ஒழுங்காக சாப்பிடுபவர்களுக்கு அதிலுள்ள தாமிர சத்து தலை முடி கருமையாக வளர உதவும்.

 

உடல் எடை

மருத்துவர்கள் கூட கூறுகிறார்கள் ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பு ஆரோக்கியமான வாழ்க்கையை தர வல்லது. முந்திரி பருப்பை சரியான அளவில் எடுத்து வருவதன் மூலம் உங்கள் உடல் எடையில் எந்த மாற்றமும் ஏற்படாது.

 

ஒரு கைப்பிடியளவு முந்திரி பருப்பை எடுத்தாலே போதும் உங்கள் உடல் எடையை கட்டுப்படுத்தலாம். 1 அவுன்ஸ் முந்திரி பருப்பில் 155 கலோரிகள் உள்ளன. எனவே இதை சரியான அளவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை கூட வாய்ப்பில்லை. மற்ற வால்நட்ஸ், பாதாம், உலர்ந்த திராட்சை பழங்களை ஒப்பிடும் போது முந்திரி பருப்பு அந்த அளவுக்கு பாதிப்பை உடல் எடையில் ஏற்படுத்துவதில்லை. பெண்கள் தினமும் 4 கிராம் அல்லது 10% அளவு முந்திரி பருப்பை எடுத்துக்கொண்டால் பசியை குறைத்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவும்.

மறுப்பு: வலைத் தளம் மற்றும் பயன்பாட்டில் இடுகையிடும் உள்ளடக்கத்தை துல்லியமாகவும், முழுமையானதாகவும், புதுப்பித்ததாகவும் வைத்திருக்க பேபிசக்ரா பாடுபடுகையில், பேபிசக்ரா எந்தவொரு உள்ளடக்கத்தின் துல்லியத்தன்மையையும், முழுமையையும், நேரத்தையும் பேபிசக்ராவோ, மற்றும் அதன் வழங்குநர்களோ அல்லது வலைத்தளமோ அல்லது பயன்பாட்டின் பயனர்களோ வழங்க முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது, பேபி சக்ரா அதற்கு பொறுப்பல்ல. இந்த உள்ளடக்கத்தின் எந்தவொரு பங்குகளோ, வரவுகளோ அல்லது விநியோகமோ பேபிசக்ரா மற்றும் அதன் ஆசிரியர் / உரிமையாளருக்கு உரிய வரவுகளுடன் செய்யப்பட  வேண்டும்.

#momfit #momhealth #momnutrition

A

gallery
send-btn

Related Topics for you

Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.