5 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பமாக இருக்கும்போது நம்முடைய பிள்ளைகள் பனிக்குடத்தில் பாதுகாப்பாக இருப்பர். இந்த பனிக்குட நீர் சரியான அளவில் இருக்க வேண்டியது பிரசவத்தை மிகவும் எளிதாக்கும். ஆனால், ஒரு சிலருக்கு பனிக்குட நீர் மிகக்குறைவாக இருக்க, இதனால் பிள்ளைகளின் அசைவும் கட்டுப்பாட்டில் இருந்துவிடுகிறது. பிள்ளை பிறக்கும்போது முதலில் தலை வெளியில் வரும் வகையில் இருக்க வேண்டும். ஒருவேளை கால் வெளியில் வரும் நிலையில் இருந்தால் சிசேரியனுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கவும் வாய்ப்புண்டு. பிரசவம் எளிதாக இருக்க பனிக்குட நீரின் அளவு சரியாக இருத்தல் அவசியம். அதோடு, பனிக்குட நீர் என்பது பிள்ளைகளுக்கான பாதுகாப்பு வளையமும் கூட. பனிக்குட நீரில் நம் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கும்வரை அவர்களின் ஆரோக்கியத்திற்கு எந்த குறையும் இருப்பதுமில்லை. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பனிக்குட நீர் குறைந்தால், நாம் என்ன செய்வது என்பதை விளக்குகிறது இந்த பயனுள்ள பதிவு.
பனிக்குட நீர் ஏன் குறைகிறது?
பனிக்குடம் முன் கூட்டி உடைதல்:
பனிக்குடம் முன் கூட்டியே உடையக்கூடும். இதனால் பனிக்குட நீர் குறைகிறது.
தொப்புள் கொடி பிரச்சனை:
தொப்புள் கொடியானது, நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்சிஜனையும் வழங்குகிறது. ஒருவேளை கருப்பை சுவரிலிருந்து இது பிரிந்திருந்தால், அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. இதனாலும் பனிக்குடம் வலுவற்று இருக்கக்கூடும்.
பிறப்பதில் குறைபாடு:
நம்முடைய பிள்ளைகளின் சிறுநீரகம் போதுமான அளவு சிறுநீரை உற்பத்தி செய்ய தவிறினால், இதனாலும் பனிக்குட நீர் குறையக்கூடும்.
இது மட்டுமில்லாமல், பின்வரும் காரணங்களினாலும் பனிக்குட நீர் குறைகிறது. அவை,
சில மருந்துகள்:
உயர் இரத்த அழுத்தத்துக்காக பரிந்துரைக்கப்படும் மருந்து/மாத்திரையால் பனிக்குட நீர் குறையலாம்.
பிரசவத்துக்கு முன்பு பனிக்குட நீர் குறையுமா?
36 வாரங்கள் கழித்து பனிக்குட நீர் குறைய தொடங்கும். இது 42 வாரங்கள் வரையிலும் குறைந்து தான் காணப்படும். இது, பிள்ளையை நாம் வரவேற்க தயாராக இருப்பதை குறிக்கும் ஒரு அறிகுறியாகும்.
பனிக்குட நீரை அதிகரிக்க என்ன வழி?
1. தண்ணீர் அதிகம் பருகுதல்
பனிக்குட நீர், இருக்க வேண்டிய அளவுக்கு சற்று குறைவாக இருக்கும்போது, தண்ணீர் அதிகம் குடித்தாலே நல்ல முன்னேற்றம் காணப்படும்.
2. மாத்திரை
டாக்டர்கள் பனிக்குட நீரை அதிகரிக்க செய்ய மாத்திரைகளையும் சில சமயம் பரிந்துரைப்பர். பனிக்குட நீர் அதிகரிக்கும் வரை இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஓய்வு:
குறைவான பனிக்குட நீரைக்கொண்ட பெண்கள், ஓய்வில் இருக்குமாறும் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அமினோ இன்ஃபியூஷன்:
இந்த முறையில், கருப்பை வழியாக உப்புக் கரைசலை பனிக்குட பைக்குள் செலுத்தி பனிக்குட நீரை அதிகரிக்க செய்கின்றனர்.
முன் கூட்டிய பிரசவம்:
ஒருவேளை பனிக்குட நீர் தொடர்ந்து குறைந்து வருவதை டாக்டர்கள் கண்டால், முன் கூட்டிய பிரசவத்துக்கு பரிந்துரைக்கின்றனர். இதனால், தாய்க்கும், சேய்க்கும் மிகவும் நல்லது.
முன் கூட்டிய பிரசவத்தில் பிள்ளைகளுக்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் உடனடியாக கிடைக்கப்பெறுவதால், ஆரோக்கியத்தில் எந்த வித குறைபாடுகளும் உண்டாவதில்லை.
ஆலிகோஹைட்ரோமினஸ்:
பனிக்குட நீர் குறைவாக இருப்பதை இப்படி அழைப்பார்கள்.
பனிக்குட நீர் குறைவாக இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?
பனிக்குட நீர் அதிகமாக இருப்பதை எப்படி அழைப்பார்கள்?
இதனை பாலிஹைடிராமினோஸ் என்று அழைப்பார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால் பனிக்குட நீர் அதிகமாக சுரக்கும். இதுவும் பிரசவத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும்.
வேறு எதனால் எல்லாம் பனிக்குட நீர் அதிகமாகும்?
கருவில் உள்ள பிள்ளைகளினால் அதிகரிப்பவை:
எப்போது மருத்துவரை அணுகுவது?
பனிக்குட நீர் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் மருத்துவரை அணுகவும். அவர் நம்முடைய கடந்த கால மெடிக்கல் ரெக்கார்டுகளை பார்ப்பார். இல்லையேல், அல்ட்ரா சவுண்ட் உதவியுடன் பனிக்குட நீர் அளவை அளவிடுவார்.
பனிக்குட நீர் எவ்வளவு உள்ளது என்பதை பொறுத்தே அவர் என்ன செய்ய வேண்டுமென பரிந்துரைப்பார்.
ஒருவேளை பனிக்குட நீர் குறைவாக இருந்து, உங்களது கர்ப்பம் ஆரோக்கியமாக காணப்பட்டால், எந்த சிகிச்சையும் உங்களுக்கு தேவைப்படாது. இயல்பாகவே அதன் அளவை அதிகரிக்க செய்ய முடியும். இந்த நிலையின்போது, டாக்டர் அடிக்கடி அல்ட்ரா சவுண்ட் உதவியுடன் பனிக்குட நீரை தொடர்ந்து கண்காணிக்க செய்வார்.
கருவில் உள்ள பிள்ளையின் ஆரோக்கியத்தில் பனிக்குட நீர் முக்கியமான பங்கை வகிக்கிறது.
பனிக்குட நீர் குறைவாக இருக்கும்போது தண்ணீர் குடிப்பதை விட ஒரு அற்புதமான மருந்து இருந்துவிடாது. நீர்ச்சத்து மிகவும் அவசியம் என்பதால் இளநீர் நாம் குடிக்கலாம்.
அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
A
Suggestions offered by doctors on BabyChakra are of advisory nature i.e., for educational and informational purposes only. Content posted on, created for, or compiled by BabyChakra is not intended or designed to replace your doctor's independent judgment about any symptom, condition, or the appropriateness or risks of a procedure or treatment for a given person.