28 Oct 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
வைட்டமின் B தான் ஃபோலிக் அமிலமாகும். இது பலவிதமான துணை மாத்திரைகள் மற்றும் உணவு பொருட்களில் இருக்கும் வைட்டமினாகும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது ஃபோலிக் அமிலம். இந்த ஃபோலிக் அமிலம், நம்முடைய உடலில் புதிய செல்களை உருவாக்கவும், DNA-ஐ உற்பத்தி செய்யவும் உதவுகிறது. இது நமக்கும், நம்முடைய பிள்ளைகளுக்கும் எண்ணற்ற பலனை வழங்குகிறது.
எப்போது இது நமக்கு தேவை?
இப்போதெல்லாம் கர்ப்பமாக இருப்பதற்கு முன்பாகவே இந்த ஃபோலிக் அமிலத்தை பெண்கள் எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டனர். இது நம்முடைய கருவில் வளரவிருக்கும் பிள்ளைகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளது.
கர்ப்பமாக இருப்பதற்கு முன்பாக இந்த ஃபோலிக் அமிலத்தை நாம் எடுத்துக்கொள்ளும்போது, பிறப்பு சார்ந்த குறைபாடுகள் தடுக்கப்படுகிறது.
எதற்காகவெல்லாம் ஃபோலிக் அமிலம் நமக்கு உதவுகிறது?
1. நரம்பு குழாய் தொடர்பான பிரச்சனை
நம் கருவில் வளரும் பிள்ளைகளுக்கு நரம்பு சார்ந்த பிரச்சனைகள் எதுவும் இல்லாமல் ஃபோலிக் அமிலம் பார்த்துக்கொள்கிறது. அதோடு நம்முடைய பிள்ளைகளின் மூளை வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலம் உதவுகிறது.
2. சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி
ஃபோலேட்டை நாம் எடுத்துக்கொள்வது, நம்முடைய உடலில் உருவாகும் சிவப்பு இரத்த அணுக்களுக்கு நல்லது. இரத்தசோகை போன்ற இரும்புச்சத்து குறைபாடுள்ள பிரச்சனைகளுக்கு ஃபோலிக் அமிலம் உதவுகிறது.
3. பிறப்பில் குறைபாடுகள்
ஃபோலிக் அமிலத்தை நாம் எடுத்துக்கொள்ளும்போது, மரபு வழிக் குறைபாடு குறைகிறது. குறைப்பிரசவம், கருச்சிதைவு, கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சி குறைபாடு போன்றவை ஃபோலிக் அமிலத்தால் சரியாகிறது.
4. கர்ப்பிணிகளுக்கு நல்லது
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வரக்கூடிய ப்ரீ-எக்ளாம்ப்சியா, இதய பிரச்சனை, புற்றுநோய், அல்சைமரின் நோய் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பை வழங்குகிறது போலிக் அமிலம்.
5. மற்ற பலன்கள்
DNA மறு உருவாக்கத்துக்கும், புதிதாக உற்பத்தி ஆவதற்கும் இது உதவுகிறது. நஞ்சுக்கொடி வளர்ச்சிக்கும் இது உதவுகிறது.
ஃபோலிக் அமிலம் இருக்கும் உணவுகள் எவை?
1. பருப்பு வகைகள்
இதனில் இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து போன்றவை உள்ளது.
2. கொண்டைக்கடலை
கொண்டைக்கடலையில், அதிகமான ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, புரதச்சத்து போன்றவை உள்ளது. கொண்டைக்கடலையை வேகவைத்து, அதனோடு நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம் சேர்த்து கறியாக சாப்பிடலாம்.
3. ப்ரோக்கோலி
இது ஒரு அற்புதமான உணவு என்றாலும், அவ்வளவு எளிதில் கிடைக்க கூடியதும் அல்ல. இதனில் ஃபோலேட்டுகள், இரும்புச்சத்து, வைட்டமின் B6, பீட்டா கரோட்டின், வைட்டமின் K போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
இதனை வேகவைத்து பூண்டு சேர்த்து கறியாக சமைத்து நாம் சாப்பிடலாம். ப்ரோக்கோலி கிடைக்காவிட்டால், காலிபிளவரும் இதற்கு பதிலாக சேர்த்துக்கொள்ளலாம்.
4. சிவப்பு காராமணி
இதனில், ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை அடங்கியுள்ளது. இந்த சிவப்பு காராமணியை சுண்டலாகவோ அல்லது மசாலாகவோ செய்து நாம் சாப்பிடலாம்.
5. சோயா
இதனில் ஃபோலேட்டுகள், இரும்புச்சத்து, கால்சியம், புரதச்சத்து போன்றவை அடங்கியுள்ளது. இதனை புலாவாகவோ அல்லது கறியாகவோ செய்து நாம் சாப்பிடலாம். சோயாப்பாலையும் நம் உணவோடு சேர்த்துக்கொள்ளலாம்.
6. பசலைக்கீரை
இதனில் ஃபோலேட்டுகள் மற்றும் கால்சியமுள்ளது. பருப்புடன், பசலைக்கீரையை சேர்த்து சாப்பிடும்போது ஃபோலேட் நமக்கு இருமடங்கு கிடைக்கிறது. இந்த பசலைக்கீரையில் ரைஸ்,, கூட்டு போன்றவற்றை நாம் செய்யலாம்.
7. கோதுமை ரவை
இதனில் ஃபோலேட் நிறைந்துள்ளது. இதனை கொண்டு காய்கறிகளை மிக்ஸ் செய்து உப்புமா செய்து நாம் சாப்பிடலாம். அதேபோல ரவை இட்லி, ரவை தோசை போன்றவையும் நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. கோதுமை ரவையில் அல்வாவும் செய்து நாம் சாப்பிடலாம்.
8. பச்சை பட்டாணி
இதனில் ஃபோலேட், வைட்டமின் C, வைட்டமின் K, பீட்டா கரோட்டின் போன்றவை அடங்கியுள்ளது. இந்த பட்டாணி கொண்டு குருமா, மசாலா, புலாவ், உப்புமா கூட செய்து நாம் சாப்பிடலாம்.
9. மாதுளை
இதனில் ஃபோலேட், இரும்புச்சத்து, ஆக்சிஜனேற்ற பண்பு ஆகியவை உள்ளது. மாதுளையை ஜூஸாக அடித்து நான் குடிக்கலாம்.
10. முழு தானிய பிரெட்
இதனில் இரும்புச்சத்து, ஃபோலேட், நார்ச்சத்து போன்றவை உள்ளது.
கர்ப்பிணிகளே, ஆரோக்கியமான உணவை உண்டு நம் மற்றும் நம்முடைய பிள்ளைகளின் நலன் மீது கூடுதல் அக்கறை கொள்வோம் வாருங்கள். நன்றி, வணக்கம்.
A