புதிதாய் பிறந்த பிள்ளைக்கு தேவைப்படும் வைட்டமின் - D மற்றும் இரும்புச்சத்து

cover-image
புதிதாய் பிறந்த பிள்ளைக்கு தேவைப்படும் வைட்டமின் - D மற்றும் இரும்புச்சத்து

நம்முடைய பிள்ளைகள் எவ்வளவு தாய்ப்பால் அல்லது ஃபார்முலா பால் குடிக்கின்றனர் என்பதை பொறுத்து அவர்களுக்கு வைட்டமின்-D தேவைப்படுகிறது. அதேபோல, நம்முடைய பிள்ளைகளுக்கு தேவையான மற்றொரு ஊட்டச்சத்து இரும்புச்சத்தாகும். இதனை குறித்து இப்போது விவரிக்கிறது இந்த பயனுள்ள பதிவு.

 

வைட்டமின்-D குறித்து நாம் அறிய வேண்டியவை என்ன?

நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு முழுமையாக தாய்ப்பால் கொடுத்தாலோ அல்லது குறைவாக தாய்ப்பால் கொடுத்து வந்தாலோ 400 IU (சர்வதேச அலகுகள்) வைட்டமின்-D ஒரு நாளைக்கு தேவைப்படுகிறது. ஒரு வருடம் கழித்து தான் நாம் நம்முடைய பிள்ளைக்கு பசும்பால் கொடுக்க தொடங்க வேண்டும். 1 வயதுக்கு முன்னால் பசும்பாலை ஜீரணிக்க அவர்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கும்.

திடப்படுத்தப்பட்ட ஃபார்முலா பாலில் வைட்டமின்-D உள்ளது. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே இந்த திடப்படுத்தப்பட்ட வைட்டமின் பாலை, நம்முடைய பிள்ளைகளுக்கு தர வேண்டும். அவற்றில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை மிக கவனமாக நாம் பின்பற்ற வேண்டும். அதேபோல கொடுக்கப்பட்ட டிராப்பர்களை மட்டுமே நாம் பயன்படுத்தவும் வேண்டும்.

நம்முடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தாய்ப்பாலில் பல ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அது போதிய அளவிலான வைட்டமின்-Dஐ வழங்குவதில்லை. நம்முடைய பிள்ளைகளுக்கு கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்ச வைட்டமின்-D தேவைப்படுகிறது. இதன் குறைப்பாட்டால் நம்முடைய பிள்ளைகளுக்கு ரிக்கெட்ஸ், எலும்பு மெலிதல் போன்ற பிரச்சனைகள் வரக்கூடும். இந்த பிரச்சனையை தவிர்க்க வைட்டமின்-D கூடுதல் சத்துக்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறது.

ஆறு மாதங்களுக்கு பிறகு நாம் கொடுக்கும் சாலிட் ஃபுட்டால் நம்முடைய பிள்ளைக்கு தேவையான வைட்டமின்-D சத்து கிடைக்க தொடங்கிவிடுகிறது.

ஆனாலும் முதல் ஆறு மாதங்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டிய வைட்டமின்-D குறித்து நாம் மருத்துவர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும்.

 

எவ்வளவு வைட்டமின்-D நமக்கு தேவை?

இந்த வைட்டமின்-D, தாய்ப்பால் தரும் நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் மிகவும் முக்கியமானதாகும். ஆனாலும், அளவுக்கு அதிகமாக வைட்டமின்-D நாம் எடுத்துக்கொண்டால், அதுவும் நஞ்சாகும். அதனால், டாக்டர் பரிந்துரைத்த அளவிற்கே வைட்டமின்-D நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிள்ளைகளுக்கு இரும்புச்சத்து கிடைக்க உதவும் வழிகள்

நம்முடைய பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முக்கியமான பங்கை வகிப்பது இரும்புச்சத்தும் தான். இது தான் நம்முடைய உடலுக்கு தேவையான ஆக்சிஜனை வழங்கவும் செய்கிறது.

ஹீமோகுளோபின் இல்லாமல் நம்முடைய உடலானது இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வது கிடையாது. அதேபோல, இரும்புச்சத்து குறைந்தால், இதனால் நம்முடைய பிள்ளைகளின் தசைகள், திசுக்கள், செல்களால் ஆக்சிஜனை பெறவும் இயலாது.

தாய்ப்பால் குடிக்கும் பிள்ளைகள், முதல் ஆறு மாதங்களில், தாய்ப்பால் மூலமாக அவர்களுக்கு தேவையான இரும்புச்சத்தை பெறுகின்றனர். ஃபார்முலா பால் குடிக்கும் பிள்ளைகளும் அவர்களுக்கு தேவையான இரும்புச்சத்தை திடப்படுத்தப்பட்ட பால் மூலம் பெறுகின்றனர்.

 

தாய்ப்பால் தரும் அம்மாக்கள் சாப்பிட வேண்டிய இரும்புச்சத்து உணவு என்னென்ன?

1. திடப்படுத்தப்பட்ட தானியங்கள்
2. பச்சை கீரைகள்
3. உலர்ந்த விதை மற்றும் பருப்பு உணவுகள்
4. முழு தானியங்கள்
5. பீன்ஸ்
6. பழங்கள் (அத்திப்பழம், பேரிட்சை, உலர்ந்த திராட்சை, ஆப்பிள்)
7. சிக்கன்
8. கானாங்கெளுத்தி மீன்
9. முட்டைகள்
10. இறைச்சி போன்றவை

 

இரும்புச்சத்தை உறிஞ்ச தேவையான வைட்டமின் எது?

வைட்டமின்-C ஆனது இரும்புச்சத்தை உறிஞ்ச நமக்கு தேவைப்படுகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்ற பழங்களிலும், தக்காளி, கேரட் போன்ற காய்கறிகளும் இரும்புச்சத்தை உறிஞ்சும் வைட்டமின்-C உள்ளது.

தோழிகளே, நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் தேவையான இரண்டு முக்கியமான ஊட்டச்சத்துக்களை பற்றி இப்போது பார்த்தோம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#momhealth #momnutrition #breastfeeding
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!