• Home  /  
  • Learn  /  
  • கர்ப்பமாக இருக்கும் போது வரும் முதுகு வலியும், அதற்கான தீர்வுகளும்
கர்ப்பமாக இருக்கும் போது வரும் முதுகு வலியும், அதற்கான தீர்வுகளும்

கர்ப்பமாக இருக்கும் போது வரும் முதுகு வலியும், அதற்கான தீர்வுகளும்

3 Nov 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

இப்போது முதுகுவலி வருவது பொதுவான விஷயமே. ஆனாலும் இது கவனிக்க வேண்டிய ஒரு பிரச்சனையாகவும் இருக்கிறது. கர்ப்பமாக இருக்கும்போது வரும் முதுகு வலி பற்றியும், அதற்கு என்ன தீர்வு என்பதையும் நாம் இந்த பயனுள்ள பதிவில் காணலாம்.

 

எதனால் முதுகு வலி வருகிறது?

நாம் இப்போது கூடுதல் எடையுடன் காணப்படுவோம். இதனால் மைய ஈர்ப்பு விசை என்பது மாற்றம் நிறைந்து காணப்படுகிறது. ஹார்மோன் மாற்றங்களினால் நம்முடைய தசைநார்கள் தளர்வடைந்து காணப்படும். இதனால் முதுகு வலி உண்டாகிறது.

 

முதுகு வலிக்கு எவையெல்லாம் தீர்வுகளாக உள்ளது?

1. சிறந்த நிலையில் இருத்தல்

நம் வயிற்றில் பிள்ளைகள் வளரும்போது, மைய ஈர்ப்பு விசை முன்னோக்கி நகர்கிறது. இதனால் கீழ்காணும் நிலைகளில் நாம் இப்போது இருக்கலாம். அவை,

அ. நேராக நிமிர்ந்து நிற்கவும்
ஆ. மார்பகத்தை தூக்கி வைத்திருக்கவும்
இ. தோள்பட்டையை பின்னோக்கி தளர்வாக வைக்கவும்
ஈ. கால்களை இறுக்கி வைத்திருக்க வேண்டாம்

நாம் ஒரே இடத்தில் வெகு நேரத்துக்கு நின்றாலும், முதுகு வலி வரும். அதேபோல, முதுகு வலி உள்ள சமயங்களில் சற்று நேரம் அமர்ந்திருப்பது நல்லது. நம்முடைய முதுகுக்கு ஆதரவை வழங்கும் நாற்காலிகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. கீழ்முதுகுக்கு பின்னால் நாம் சிறிய தலையணையையும் பயன்படுத்தலாம்.

 

2. சரியான முறையில் இருத்தல்

லோ ஹீல்ஸ், தட்டையான ஒன்று, ஹை ஹீல்ஸ் போன்றவையும் வேண்டாம். இந்த சமயங்களில் நாம் மெட்டர்னிட்டி, சப்போர்ட் பெல்ட் பயன்படுத்தலாம். ஆனாலும், மெட்டர்னிட்டி பெல்ட் பயன்பாடு குறைவாக இருத்தல் நல்லது என்கிறது ஆய்வு முடிவுகள்.

 

3. எடை தூக்குதல்

சிறிய எடை உள்ள பொருட்களை தூக்கும்போது குந்திக்கொண்டு, கால்களை மடக்கி தூக்கவும். உங்களுடைய முதுகு அல்லது இடுப்புக்கு எடையை கொடுத்து எதனையும் நாம் இப்போது தூக்கக்கூடாது. உங்கள் வரம்பறிந்து செயல்படுவது நல்லது.

 

4. பக்கவாட்டில் படுத்தல்

ஒருக்கணைத்து தூங்கவும், முதுகை கீழ்வைத்து தூங்கக்கூடாது. உங்களின் ஒன்று அல்லது இரண்டு முழங்கால்களையும் வளைக்கவும். இதற்கு உதவும் ஒன்று தான் பிரெக்னென்சிக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட தலையணைகள். இது நம்முடைய முழங்கால், அடிவயிறு, பின் முதுகு போன்றவற்றிற்கு கூடுதல் சவுகரியத்தை வழங்குகிறது.

 

5. மசாஜ் செய்தல்

இப்போது நாம் ஹீட்டிங் பேடு அல்லது ஐஸ் பேக்கை மருத்துவர்களின் பரிந்துரையுடன் பயன்படுத்தலாம். இது நம்முடைய முதுகு வலியை குறைத்து சவுகரியத்தை தருகிறது.

 

6. உடற்பயிற்சி செய்தல்

இப்போது லேசான உடற்பயிற்சிகள் செய்வது நம்முடைய முதுகு வலியை குறைக்க உதவுகிறது. நம்முடைய மருத்துவர்கள் பரிந்துரை பெற்று மட்டுமே நாம் இவற்றை செய்வது குறித்த முடிவை எடுக்க வேண்டும். வாக்கிங் செல்லுதல் அல்லது நீர் பயிற்சிகளை நாம் இப்போது மருத்துவர் பரிந்துரை பெற்று அதன்பிறகு செய்யலாம். அதேபோல அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தாலும், அதனால் அதிக உபாதைகள் உண்டாகும்.

 

7. சிகிச்சைகள்

சில ஆய்வுகள், அக்குபஞ்சர் மூலமாக கர்ப்பமாக இருக்கும்போது வரும் முதுகுவலி சரியாவதாக கூறுகிறது. கைரோபிராக்டிக் எனப்படும் சிகிச்சை மூலமாக முதுகு வலி சரியாவதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால், இது குறித்து நாம் மருத்துவர் ஆலோசனையை பெற்று அதன்படியே நடக்க வேண்டும். நாமாக எதையும் முயன்று பார்க்கக்கூடாது.

 

எப்போது மருத்துவர் தேவை?

1. உங்களுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகவும்.

2. இரண்டு வாரங்களுக்கு மேலாக முதுகு வலி இருந்தாலும் மருத்துவரை அணுகவும்.

3. சில சமயம், குறைப்பிரசவம் அல்லது சிறுநீர்நோய் தொற்றுக்கான அறிகுறியாகவும் இது இருக்கலாம்.

4. ஒருவேளை முதுகு வலியுடன் கூடிய யோனி இரத்தப்போக்கு, காய்ச்சல் அல்லது நீர் எரிச்சல் இருந்தாலும் நாம் இப்போது மருத்துவரை அணுகவும்.

 

இப்போது வரும் முதுகு வலி பொதுவான விஷயமே என்றாலும் கொஞ்சம் கவனத்தோடு நாம் இருக்கவும் வேண்டும். தேவையற்ற விஷயங்களை செய்யாமல் தவிர்க்கும்போது நிச்சயம் முதுகு வலி குறையும். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

அனைவருக்கும், அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

#pregnancymustknow #momhealth

A

gallery
send-btn

Related Topics for you