6 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
நம்முடைய உடல் சீராக இயங்க ஊட்டச்சத்து என்பது அவசியமாகிறது. ஆனால், கர்ப்பமாக இருக்கும்போது நம்முடைய பிள்ளைக்கு தேவையான ஊட்டச்சத்து குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவேளை, கர்ப்பிணிகள் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள தவறினால், அது கருவில் வளரும் குழந்தைக்கு மிகவும் சிரமத்தை தருகிறது. இது குறித்து விளக்குகிறது இந்த சிறப்பு பதிவு.
ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன?
நம்முடைய உடல் சீராக இயங்க தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போவதை மால்நியூட்ரிஷன் (ஊட்டச்சத்து குறைபாடு) என அழைக்கிறோம். இந்த மாதிரியான ஊட்டச்சத்துக்கள் பெரும் ஊட்டச்சத்து மற்றும் சிறு ஊட்டச்சத்து என இரண்டு வகைப்படும். நமக்கு கிடைக்கும் புரதச்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு போன்றவை பெரும் ஊட்டச்சத்து வகையை சார்ந்தவையாகும். வைட்டமின், மினரல்கள், தண்ணீர் போன்றவை சிறுஊட்டச்சத்து அல்லது நுண்ணிய ஊட்டச்சத்து எனப்படும். இவை குறையும்போது, இதனால் நமக்கும் நம்முடைய பிள்ளைக்கும் பலவிதமான சிரமங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது?
1. ஒதுக்குதல்
ஊட்டச்சத்துக்களின் அருமை தெரியாமல் நம் போக்குக்கு உணவை உண்ணும்போது, தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போகிறது.
2. தொற்று & நோய்
வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி மூலமாக நாம் பெறும் ஊட்டச்சத்துக்கள் வெளியாகிறது. இதனால் செரிமான மண்டலத்தில் மாற்றங்களும் காணப்படக்கூடும்.
3. சமூக பொருளாதாரம்
ஆரோக்கியமான உணவை உண்ண தேவையான குடும்ப பொருளாதாரம் இல்லாத காரணத்தால், நமக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. சமீபத்தில் கூட, கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்க அரசு உதவுவது குறிப்பிடத்தக்கது.
4. பல் பிரச்சனை
ஆரோக்கியமான உணவை நாம் உண்ணாமல் இருக்கும்போது பல் பிரச்சனைகள் மற்றும் ஈறுகளில் பிரச்சனை ஏற்படுகிறது.
5. மருந்து
சில சமயம் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் மாத்திரைகளும் ஊட்டச்சத்து சரியாக நம் உடலில் சேர விடாமல் தடுத்து விடுகிறது.
6. காலை உபாதைகள்
இப்போது நமக்கிருக்கும் வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றவை காரணமாக உடலில் இருக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் வெளியேறிய நிலையில் காணப்படுகிறது.
7. போதிய அளவு இல்லாது இருத்தல்
கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தினமும் 300 கலோரிகள் கூடுதலாக தேவைப்படுகிறது. நாம் எடுத்துக்கொள்ளும் உணவு ஆரோக்கியமாக இல்லாத பட்சத்தில், ஊட்டச்சத்து குறைபாடு நமக்கு உண்டாகிறது.
ஊட்டச்சத்து குறைபாட்டால் என்னவெல்லாம் ஏற்படும்?
1. கர்ப்பமாக இருக்கும்போது பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் காணப்பட்டால், பிரசவத்தின்போது மிகப்பெரிய சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
2. கருச்சிதைவு ஏற்படாமல் தடுக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவை நாம் சாப்பிட வேண்டியது அவசியமாகும்.
3. ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பற்குழி பிரச்சனை மற்றும் பல் சம்பந்தமாக பல பிரச்சனைகள் வரக்கூடும்.
4. ஊட்டச்சத்து குறைபாட்டுடன் நாம் இருக்கும்போது எலும்புமெலிவு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பிள்ளைகளின் எலும்பு வளர்ச்சியும் இதனால் பாதிக்கக்கூடும்.
5. கர்ப்பமாக இருக்கும்போது இரத்தசோகை வர முக்கியமான காரணம் நாம் ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவை சாப்பிடதாதே ஆகும். இதனால், வழக்கத்தை விட குறைவான இரத்த சிவப்பணுக்களே காணப்படும். இதனால், ஆக்சிஜன் பற்றாக்குறையும் இருக்கக்கூடும்.
6. ஊட்டச்சத்து குறைபாட்டால் இரத்த ஓட்டத்தில் நஞ்சு கலக்கவும் வாய்ப்புள்ளது. இந்த சூழல் ஏற்படும் அளவிற்கு நாம் எக்காரணம் கொண்டு கவனக்குறைவாகவும் இருந்துவிட கூடாது.
எப்படி இதனை தடுப்பது?
தோழிகளே, இப்போது நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொண்டாலே, எந்தவொரு உபாதைகள் குறித்து கவலைப்பட வேண்டிய அவசியமே இருக்காது. நம்முடைய பிள்ளையை பார்க்க போகும் மகிழ்ச்சி ஒன்றே இப்போது நமக்கு போதும். இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை வென்று, ஆரோக்கியமாக குழந்தையை பெற்றுக்கொள்ளலாம். மீண்டும், ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
A