டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல்

8 Nov 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கர்ப்பிணிகளுக்கு டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்வது? பிறந்த பிள்ளைகளுக்கு வந்தால் என்ன செய்வது? தாய்ப்பால் அளிக்கும் அம்மாக்களுக்கு வந்தால் என்ன செய்வது?

 

மழைக்காலம் வந்துவிட்டது என்றாலே கொசுத்தொல்லை அதிகமாகவே இருக்கும். இந்த கொசுவினால் பரவும் ஒரு வியாதி தான் டெங்கு காய்ச்சல். இது கர்ப்பிணிகளையும், பிறந்த பிள்ளைகளையும் அளவுக்கதிகமாகவே அச்சுறுத்துகிறது. குறிப்பாக, சுத்தம் செய்யாமல் கிடக்கும் தொட்டிகளில் இருக்கும் அசுத்தமான தண்ணீர் காரணமாகவே டெங்கு காய்ச்சல் பரவுகிறது.

 

அதனால், கர்ப்பிணி பெண்கள் அவர்களுடைய வீட்டில் இருக்கும்போது போதிய கவனத்துடன் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

 

டெங்கு காய்ச்சல் பற்றிய தகவல்

ஏடிஸ் என்ற கொசு இனத்தால் பரவுவது தான் டெங்கு காய்ச்சல். இந்த காய்ச்சல் பிள்ளைகளுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது கருவில் உள்ள பிள்ளைகளுக்கு கூட ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறது.

 

கர்ப்பமாக இருக்கும்போது டெங்கு வராமல் பார்த்துக்கொள்வது எப்படி?

1. நாம் உண்ணும் உணவிலும், ஆரோக்கியம் குறித்தும் மருத்துவர் ஆலோசனை பெற்று அதன்படி நடத்தல் வேண்டும். இதனால் தொற்று நோய்கள் எதுவும் ஏற்படாமல் நம்மை பார்த்துக்கொள்ள முடிகிறது.

2. தொற்று அதிகமாக உள்ள இடங்களுக்கு பயணம் செய்வதை கட்டாயம் தவிர்க்கவும். உங்கள் வீட்டில் உள்ள தொட்டி போன்றவை சுத்தமாக உள்ளதா என்பதை அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளவும்.

 

கர்ப்பமாக இருக்கும்போது டெங்கு காய்ச்சல் வந்தால் என்ன செய்வது?

 • ஒருவேளை இப்போது நமக்கு டெங்கு காய்ச்சல் இருக்குமெனில், நீர்ச்சத்து குறையாமலும், ஊட்டச்சத்து குறைபாடில்லாத உணவுகளை எடுத்துக்கொள்வது குறித்தும் கவனம் வேண்டும்
 • நமக்கு கர்ப்பமாக இருக்கும்போது டெங்கு காய்ச்சல் இருந்தால், காய்ச்சல் அதிகமாக இருத்தல், வயிற்று வலி, கடும் வேதனை அளிக்கும் தலைவலி, வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்
 • டெங்கு காய்ச்சல் நம்முடைய உடலில் உள்ள பிளேட்டலட் எனப்படும் இரத்த தட்டுக்களை குறைக்க செய்யும். இந்த மாதிரியான சூழலின் போது நம் உடலில் உள்ள இரத்த அளவை மருத்துவர்கள் தொடர்ந்து பரிசோதிப்பர்
 • இளநீர், ORS, வீட்டில் செய்த உணவு போன்றவை இப்போது நமக்கு சிறந்தது
 • குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் நாம் குடிக்கலாம்
 • கர்ப்பமாக இருக்கும்போது டெங்கு காய்ச்சல் வந்தால், நம் மற்றும் கருவில் உள்ள பிள்ளையை மருத்துவர்கள் பிறந்த பின்பும் தொடர்ந்து கண்காணிக்கலாம்
 • டெங்கு காய்ச்சலை குறித்து கவனக்குறைவாக இருந்துவிட கூடாது. இது முன் கூட்டிய பிரசவத்துக்கு வழிவகுக்க வாய்ப்பை ஏற்படுத்திவிடக்கூடும்

 

டெங்கு காய்ச்சல் இருக்கும்போது தாய்ப்பால் கொடுக்கலாமா?

1. டெங்கு காய்ச்சல் இருக்கும்போது தாய்ப்பால் தருவதால் எந்தவித பாதிப்பும் இல்லை என்கின்றனர் நிபுணர்கள்

2. டெங்கு காய்ச்சல் தாயிடமிருந்து பிள்ளைக்கு தாய்ப்பால் மூலமாக பரவுவதும் இல்லை.

3. ஆய்வுகள் மூலம் தெரிய வருவது என்னவென்றால், முதல் முறை நாம் தாய்ப்பால் கொடுக்கும்போது நம் பிள்ளைகளுக்கு கிடைக்கும் கொலஸ்ட்ரம் எனப்படும் சீம்பாலில் டெங்குவுக்கு எதிரான பண்புகள் உள்ளது என்கிறது.

4. ஒருவேளை டெங்குவால் அம்மாவுக்கு அதிகமான பாதிப்பு இருந்தால் மட்டும் ஃபார்முலா பாலை கொடுக்க மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

 

டெங்கு காய்ச்சல் இருக்கும்போது என் பிள்ளைக்கு எப்படி தாய்ப்பால் கொடுப்பது?

 

 • முதலில் இப்போது நாம் தாய்ப்பால் கொடுப்பது பிள்ளைக்கு பாதுகாப்பா என்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெறவும்
 • ஒருவேளை நமக்கு காய்ச்சல் மிகவும் அதிகமாக இருந்தால், பிள்ளையை மார்போடு ஒட்டி பால் கொடுக்கும்போது பாதுகாப்பற்றதாக இருக்கும்
 • இப்போது ஃபார்முலா பால் கொடுப்பது குறித்தும் நாம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும்
 • தாய்ப்பாலை சேமித்து வைத்து நம் பிள்ளைகளுக்கு கொடுப்பது குறித்தும் மருத்துவர் ஆலோசனையை நாம் இப்போது பெறலாம்

மழை நேரம் என்பதால் கொசு உற்பத்தி அதிகமாகவே உள்ளது. அதனால் நம்முடைய சுத்தம் குறித்து நாம் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் பகுதியில் டெங்கு காய்ச்சல் கூடுதலாக இருக்குமெனில், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, இதனை வரும் முன் எப்படி விரட்டுவது என்பது குறித்து முடிவு செய்யலாம். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் உங்களை சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

 

Content Image Source: Shutterstock

#momhealth #pregnancymustknow

A

gallery
send-btn

Related Topics for you