10 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
கர்ப்பமாக இருக்கும்போது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களினால் ஏதாவது பாதிப்பு உண்டாகுமா? இதற்கு நாம் என்ன செய்வது?
கர்ப்பமாக இருக்கும்போது நம்முடைய உடலில் எண்ணற்ற மாற்றங்கள் காணப்படுகிறது. இவை அனைத்திற்கும் பல காரணங்கள் இருக்க அவற்றுள் முக்கியமான பங்கை வகிப்பது நம்முடைய ஹார்மோன் தான். கர்ப்பிணிகள் சருமத்திலும் ஹார்மோன் காரணமாக ஒரு சில மாறுதல்கள் உண்டாகிறது. அவை என்னவென்பதை தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
என்ன மாதிரியான மாற்றங்களை நாம் இப்போது எதிர்பார்க்கலாம்?
நம்முடைய முலைக்காம்பை சுற்றியும், நம்முடைய தொடை சருமத்திலும் மாற்றம் காணலாம். அதேபோல அந்தரங்க உறுப்பும், கழுத்துப்பகுதியும் கருமையாக இருக்கும். இவை அனைத்திற்கும் காரணம் நம்முடைய ஹார்மோன் தான். நம்முடைய தொப்புள் பகுதி முதல் அந்தரங்க உறுப்பு வரை கருமையான வரிகளையும் நம்மால் இப்போது பார்க்க முடியும். கருப்பு திட்டுக்களும் முகத்தில் வரலாம். இவை அனைத்தும் நம்முடைய பிரசவம் கழித்து இயல்பு நிலைக்கு நிச்சயம் திரும்பிவிடவும் கூடும்.
கர்ப்பமாக இருக்கும்போது முகத்தில் பருக்களையும் நம்மால் காண முடியும். இப்போது நாம் பயன்படுத்தும் சோப்பு மற்றும் ஷாம்புவில் கூடுதல் கவனம் வேண்டும். முடிந்தளவு, இதற்காக நாம் மருத்துவரின் பரிந்துரையை பெறலாம்.
இதனை நம்முடைய வயிற்றுப்பகுதி, மார்புப்பகுதி, இடுப்புப்பகுதி, பின்பகுதி மற்றும் தொடைப்பகுதிகளில் நம்மால் காண முடியும். இந்த பிரச்சனை, இரண்டாவது மற்றும் மூன்றாவது மூன்று மாதங்களில் கர்ப்பிணிகளுக்கு பொதுவான ஒன்று தான் என்பதால் பயப்பட தேவையில்லை. இதற்காக பலவிதமான கிரீம்கள், ஆயின்மென்டுகள் என பல பொருட்கள் உள்ளது.
சரும பிரச்சனைகளின் வகைகள் என்னென்ன?
1. ஏற்கனவே இருக்கும் சரும பிரச்சனை
நமக்கு ஏற்கனவே சரும பிரச்சனை இருக்குமெனில், கர்ப்பமாக இருக்கும்போது கூடுதல் விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
2. ஹார்மோன் சார்ந்த சரும பிரச்சனை
இது கர்ப்பமாக இருக்கும்போது மட்டுமே காணப்படும். ஆனால், பிரசவம் கழித்து மெல்ல இயல்பு நிலைக்கு நம் சருமம் திரும்பிவிடும்.
3. மற்ற காரணங்கள் சார்ந்த சரும பிரச்சனை
கர்ப்பமாக இருக்கும்போது இன்னும் சில உடலியல் காரணங்களால் நமக்கு சரும பிரச்சனை உண்டாகலாம். இது குறித்து நாம் மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.
இதனை நாம் எப்படி தடுப்பது?
இதனை நம்மால் தடுக்க முடியாது, ஆனால் மருத்துவர்களின் பரிந்துரையுடன் குறைக்கலாம். இதற்காக நாம் ஒரு சில வீட்டு வைத்தியங்களையும் செய்யலாம். இந்த வைத்தியங்கள் இப்போது நமக்கு ஏற்படும் அரிப்பை குறைக்க உதவுகிறது.
பிரசவத்திற்கு பின்பு வெகு நாட்கள் இப்பிரச்சனை இருந்தாலும் மருத்துவரை அணுகவும். பெரும்பாலான பெண்களுக்கு, பிரசவத்துக்கு பின் இந்த பிரச்சனை இருப்பதில்லை.
கர்ப்பமாக இருக்கும்போது சருமத்தில் ஏற்படும் மாற்றத்தை குறைப்பது எப்படி?
1. சூரிய கதிர் ஒளி
கர்ப்பமாக இருக்கும்போது நம்மீது சூரிய ஒளி பட்டால் இது போன்ற நிற மாற்றம் சருமத்தில் ஏற்படும். அதனால் வெளியில் செல்லும்போது லாங் ஸ்லீவ் டிரெஸ் அணிந்துக்கொள்வதன் மூலம் சூரிய ஒளி நம்மீது படாமல் பார்த்துக்கொள்ளலாம்.
2. ஃபோலிக் அமிலம்
ஃபோலிக் குறைபாட்டால் கூட நம்முடைய சருமத்தில் மாற்றம் காணலாம். அதனால் நாம் ஃபோலிக் மாத்திரை அல்லது உணவுகளை எடுத்துக்கொள்வதை உறுதி செய்துக்கொள்ளவும். ஃபோலிக் மாத்திரையை மருத்துவர் பரிந்துரையுடன் எடுத்துக்கொள்ளவும்.
3. வாக்ஸ்
கர்ப்பமாக இருக்கும்போது வாக்ஸ் செய்வதனால் சரும நிறம் மாறி காணப்படவும் வாய்ப்புள்ளது.
4. சருமத்திற்கான பொருட்கள்
கிளியன்சர், மாய்ஸ்சரைசர், ஃபேஸ் கிரீம் போன்றவை பயன்படுத்தும்போது அவை நம்முடைய சருமத்துக்கு அலர்ஜி ஏற்படுத்தவில்லை என்பதை உறுதிசெய்யவும். அதேபோல மருத்துவர் பரிந்துரையின்றி நாமாக எந்த பொருட்களையும் நம் உடம்பில் பயன்படுத்தக்கூடாது.
சருமத்தின் ஆரோக்கியம் என்பது கர்ப்பிணிகளுக்கு மிக மிக அவசியமான ஒன்று. அதனால், நாம் பயன்படுத்தும் பொருட்களில் உள்ள கெமிக்கல், தரம் போன்றவற்றை கவனித்து மருத்துவர் அனுமதி பெற்ற பிறகே பயன்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு பயனுள்ள பதிவில் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
A