எக்டோபிக் பிரக்னென்சியால் பாதிப்பா?

எக்டோபிக் பிரக்னென்சியால் பாதிப்பா?

12 Nov 2021 | 1 min Read

Medically reviewed by

Author | Articles

கர்ப்பம் என்பது முட்டை கருவுறும் ஒரு நிலையை குறிக்கிறது. பொதுவாக, கருவுற்ற முட்டை கருப்பை சுவற்றில் பதிவதை கர்ப்பம் என்கிறோம். ஆனால், இந்த எக்டோபிக் பிரக்னென்சியில் கருவுற்ற முட்டையானது கருப்பை சுவருக்கு வெளியில் பதிந்து வளர தொடங்கும். இதனால் பாதிப்பா? இதற்கு நாம் என்ன செய்வது? இப்போது பார்ப்போம்.

 

ஒரு அம்மாவின் உண்மை வார்த்தை இது, “நம்புங்கள், நான் செய்தேன். எனக்கு ஒரு முறை எக்டோபிக் பிரக்னென்சி இருந்தது, ஒரு முறை கருச்சிதைவும் உண்டானது, கருவுற சிகிச்சையும் பெற்றேன். ஏனென்றால், நான் நிச்சயம் கர்ப்பமாவேன் என்று எனக்கு தெரியும்.”

 

எங்கே எக்டோபிக் பிரக்னென்சி காணப்படும்?

இந்த வகை கர்ப்பம், பெரும்பாலும் பெலோபியன் குழாய்க்குள் நிகழ்கிறது. இது சினைப்பைகளில் இருந்து கருப்பைக்கு முட்டைகளை எடுத்து செல்கிறது. இந்த வகையான எக்டோபிக் பிரக்னென்சியை டியூபல் பிரக்னென்சி என்றும் அழைப்பர். சில சமயம், எக்டோபிக் பிரக்னென்சி என்பது சினைப்பை, வயிற்று குழி அல்லது கர்ப்பப்பை கீழ் பகுதியிலும் காணப்படலாம்.

 

இதன் அறிகுறிகள் என்னென்ன?

முதன் முதலாக இதற்கான எந்த அறிகுறியும் தெரியாமல் போகலாம். எக்டோபிக் பிரக்னென்சி உள்ள ஒரு சில பெண்களுக்கு கர்ப்பமாக இருக்கும்போது காணப்படும் அறிகுறிகளும் இருக்கலாம். அதாவது மாதவிடாய் தவறுதல், மார்பகம் மென்மையடைதல், குமட்டல் போன்ற அறிகுறிகள் இருக்கலாம்.

கர்ப்ப பரிசோதனை எடுக்கும்போது பாசிட்டிவ் எனவும் வரலாம்.

ஆனால், கருவுற்ற முட்டை சரியான இடத்தில் வளராது. அப்போது உணரும் அறிகுறிகளையும் நாம் காண வாய்ப்புள்ளது.

 

எக்டோபிக் பிரக்னென்சியின் ஆரம்ப அறிகுறி எப்படி இருக்கும்?

லேசான உதிரப்போக்கையும், இடுப்பு வலியையும் நம்மால் உணர முடியக்கூடும்.

பெலோபியன் குழாயில் இருந்து இரத்தம் கசிவதனால், தோள்பட்டை வலி இருக்கவும் வாய்ப்புள்ளது.

 

அவசரகால அறிகுறியாக தோன்றுவது என்ன?

அதிகமான உதிரப்போக்கை நீங்கள் உணர்ந்தால் கட்டாயம் மருத்துவரை பார்ப்பது நல்லது.

 

வேறு எப்போதெல்லாம் நாம் மருத்துவரை பார்ப்பது நல்லது?

  • கடுமையாக வயிற்று வலி இருத்தல்
  • அந்தரங்க உறுப்பிலிருந்து இரத்தப்போக்குடன் கூடிய இடுப்பு வலி இருத்தல்
  • தோள்பட்டை வலி இருத்தல்

 

எப்படி இதனை நாம் தடுப்பது?

1. பாலுறவு நோய்கள் எதுவும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் போது இது ஏற்பட வாய்ப்பு குறைவு

2. இடுப்பு அழற்சி நோய் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

 

எப்போது இந்த பிரச்சனை ஏற்படும்?

  • இடுப்பு அழற்சி நோய் இருக்கும்போது
  • 35 வயதுக்கு மேலுள்ள பெண்களுக்கு
  • பாலுறவு நோய் காரணமாக
  • இடுப்பில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தால்
  • ஏற்கனவே எக்டோபிக் பிரக்னென்சி இருந்திருந்தால்
  • கருவுற மருந்துகள் பயன்படுத்தி இருந்தால்
  • IVF போன்ற கருவுறுதல் சிகிச்சையினால்

 

எப்படி இதனை கண்டுபிடிக்க முடியும்?

நம்முடைய மருத்துவர், நாம் கர்ப்பமாக இருக்கிறோமா? இல்லையா? என பரிசோதிக்கும்போதும், இடுப்பு பரிசோதனையின் போதும் (பெல்விக் எக்ஸாம்) இதனை கண்டறிகிறார். நம்முடைய கருப்பை மற்றும் பெலோபியன் குழாய் குறித்து அறிய அவர் அல்ட்ரா சவுண்ட்டை பயன்படுத்துகிறார்.

 

இதற்கான சிகிச்சை என்ன?

கருவுற்ற முட்டையால் கர்ப்பப்பைக்கு வெளியே பாதுகாப்பாக இருக்க முடிவதில்லை. அதனால், தீவிரமான பிரச்சனைகளை தவிர்க்க நம்முடைய மருத்துவர் வெளியில் இதனை எடுக்க பரிந்துரைப்பார். இதற்காக மருந்து அல்லது அறுவை சிகிச்சையை அவர் பரிந்துரைக்கலாம்.

 

என்ன செய்ய வேண்டும்?

இது போன்ற சூழலில் நம் மனதை பலவீனமாக வைத்துக்கொள்ள கூடாது. இன்றைய நவீன உலகில் எல்லாமே சாத்தியம் தான் என்பதால், மீண்டும் பிள்ளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஒன்றும், இல்லாமல் போய்விடுவதும் இல்லை. ஆனால், எக்டோபிக் பிரக்னென்சி என்பதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடவும் கூடாது. மருத்துவர்கள் இந்த எக்டோபிக் பிரக்னென்சியை வென்று, நாம் நலமுடன் பிள்ளைகளை பெற்றுக்கொள்ள பல வித வழிகளை காட்டுகின்றனர்.

நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது, மீண்டும் கர்ப்பமாக எப்படி வாய்ப்பு கிட்டாமல் போகுமென்ற பாசிட்டிவ் மனநிலையுடன் இருந்தால், நிச்சயம் இந்த எக்டோபிக் பிரக்னென்சியை நம்மால் வெல்ல முடியும்.

இந்த ஆர்டிக்கல் உங்களுக்கு பிடிச்சிருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.

மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.

#pregnancymustknow #momhealth #pregnancymilestones

A

gallery
send-btn