22 Nov 2021 | 1 min Read
Medically reviewed by
Author | Articles
இந்த பதிவில், ‘ஒற்றை தலைவலி வர காரணம் என்ன? எதை உண்ணும்போது இது போன்ற தலைவலி பிரச்சனை நமக்கு அதிகமிருக்கும்? ஒற்றை தலைவலிக்கு என்ன டெஸ்ட் தேவைப்படுகிறது? கர்ப்பமாக இருக்கும்போது வரக்கூடிய தலைவலியை குறைக்க நாம் என்னவெல்லாம் செய்வது? ஒற்றை தலைவலிக்கு மருந்து/மாத்திரை தேவையா? எப்போது மருத்துவரை நாம் பார்ப்பது?’ போன்றவற்றை நாம் பார்க்கவிருக்கிறோம்.
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? இப்போது உங்களுக்கு புதுப்புது வலி பிரச்சனைகள் வரலாம். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஒற்றை தலைவலி வரவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை உங்களுக்கு இது போன்ற தொந்தரவு இல்லை என்றாலும், இந்த பயனுள்ள தகவலை படித்து மற்ற தோழிகளுக்கும் பகிரலாமே.
ஒற்றை தலைவலி வர காரணம் என்ன?
இது வர காரணம் என்னவென்பதை நம்மால் 100% அறிவது கடினமே. பொதுவாக நரம்புகளில் ஏற்படும் மாற்றம் காரணமாக ஒற்றை தலைவலி நமக்கு வரலாம். மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும்போது இது போன்ற பிரச்சனைகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
ஆய்வுகள் கூறுவது என்னவென்றால், மூளை செல்கள் கெமிக்கல்களை வெளியிடுகிறது. இந்த கெமிக்கல், மூளையில் உள்ள இரத்த நாளங்களை தூண்டி வெறுப்பேற்றுகிறது. இதனால் வலி வரும் என்கின்றனர்.
எதை உண்ணும்போது இது போன்ற தலைவலி பிரச்சனை நமக்கு அதிகமிருக்கும்?
ஒற்றை தலைவலிக்கு என்ன டெஸ்ட் தேவைப்படுகிறது?
தலைவலி அதிகம் இருக்கும்போது தான் ப்ரீ-எக்ளாம்ப்சியா எனப்படும் பிரச்சனை உருவாகிறது. அதனால், இந்த தலைவலியை குறித்து மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் நிச்சயம் இருப்பார்கள். சில சமயம் நாம் எடுத்துக்கொள்ளும் மருந்து அல்லது மாத்திரை காரணமாகவும் தலைவலி வரும் என்பதால், நாம் என்னெவல்லாம் மருந்து/மாத்திரை எடுத்துக்கொள்கிறோம் என்பதை மருத்துவரிடம் மறக்காமல் சொல்ல வேண்டும்.
ஒற்றை தலைவலி உங்களுக்கு இருக்கும்போது, இதே போன்று நம்முடைய குடும்பத்தில் வேறு யாருக்காவது இருந்ததா என்பதையும் நம்முடைய மருத்துவர்கள் கேட்டு தெளிவை பெறுவார்கள். இதற்காக CT ஸ்கேன்கள் மற்றும் பிற ரேடியாலஜி டெஸ்டுகளும் தேவைப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கும்போது வரக்கூடிய தலைவலியை குறைக்க நாம் என்னவெல்லாம் செய்வது?
ஒற்றை தலைவலிக்கு மருந்து/மாத்திரை தேவையா?
கர்ப்பமாக இருக்கும்போது அல்லது கர்ப்பமாக முயற்சி செய்யும்போது தேவையில்லாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றே மருத்துவர்கள் ஆலோசிப்பர். நாம் தேவையில்லாமல் மருந்து/மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும்போது, இதனால் கருவில் வளரும் பிள்ளைக்கும் ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதை மறவாதீர்கள்.
எப்போது மருத்துவரை நாம் பார்ப்பது?
கர்ப்பமாக இருக்கும்போது தலைவலி அவ்வப்போது நமக்கு வரலாம். இவை நிரந்தரமானதாக இருப்பதுமல்ல. ஒருவேளை, உங்களுக்கு இருக்கும் தலைவலி முற்றிலும் குறையாமல் கடும் அவதியை தருமெனில் கட்டாயம் இது குறித்து மருத்துவரை தாமதிக்காமல் பார்ப்பது நல்லது.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க.
மீண்டுமொரு பயனுள்ள பதிவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறோம். நன்றி, வணக்கம்.
A