கர்ப்பிணிகளுக்கு வேண்டிய ஹீமோகுளோபின் பற்றிய தகவல்

cover-image
கர்ப்பிணிகளுக்கு வேண்டிய ஹீமோகுளோபின் பற்றிய தகவல்

கர்ப்பமாக இருக்கும்போது ஹீமோகுளோபின் ஏன் குறைகிறது? என்ன செய்வது?

கர்ப்பமாக இருக்கும்போது இரத்தசோகை நமக்கு வரலாம். அதாவது இரத்தசோகை என்பது நம்முடைய இரத்தத்தில் போதுமான அளவு ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாமல் போவதே ஆகும். இவை தான் நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் ஆக்சிஜனை எடுத்துச்செல்ல உதவுகிறது.

 

இரத்தசோகை வருவதால் கர்ப்பிணிகளுக்கு பாதிப்பா?

கர்ப்பமாக இருக்கும்போது லேசான இரத்தசோகை வருவதால் எந்தவொரு பாதிப்புமில்லை. ஆனால், கடுமையான இரத்தசோகை இருக்கும்போது கட்டாயம் மருத்துவரின் பரிந்துரையுடன் ஒரு சில விஷயங்களை நாம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல், பிரசவத்தின்போது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

 

கர்ப்பமாக இருக்கும்போது வரக்கூடிய இரத்தசோகை எவை?

மூன்று விதமான இரத்தசோகை கர்ப்பிணிகளுக்கு வரலாம். அவை,

 

 • இரும்புச்சத்து குறைபாட்டினால் வரும் இரத்தசோகை
 • ஃபோலேட் குறைபாட்டினால் வரும் இரத்தசோகை
 • வைட்டமின் B12 குறைபாட்டினால் வரும் இரத்தசோகை

 

எப்போது இரத்தசோகை பாதிப்பை உண்டாக்கும்?

 • நம் வயிற்றில் ஒன்றுக்கும் மேல் பிள்ளைகள் இருந்தால்
 • முதல் மற்றும் இரண்டாவது கர்ப்பம் நெருக்கத்தில் வந்தால்
 • காலை சுகவீனம் காரணமாக இருக்கக்கூடிய அதிக வாந்தியினால்
 • இரும்புச்சத்துள்ள உணவை சாப்பிடாமல் இருந்தால்
 • கர்ப்பமாவதற்கு முன்பே இரத்தசோகை பிரச்சனை இருந்தால்


இரத்தசோகையின் அறிகுறிகள் என்னென்ன?

கீழ்காணும் அறிகுறிகள் காணப்பட்டால், இரத்தசோகை உங்களுக்கு இருக்கலாம்,

1. சருமம், உதடு, நகங்கள் வெளிறி போய் இருத்தல்
2. அசதி அல்லது பலவீனமாக காணப்படுதல்
3. மயக்கமாக வருதல்
4. மூச்சு விடுவதில் சிரமம் இருத்தல்
5. இதயத்துடிப்பு சீரற்று இருத்தல்
6. கவனிக்க சிரமமாக இருத்தல்

 

கர்ப்பிணிகளுக்கு இதனால் என்னவெல்லாம் பாதிப்பு உண்டாகலாம்?

1. பிரசவம் முன் கூட்டி இருத்தல்
2. குழந்தை குறைந்த எடையுடன் இருத்தல்
3. பிரசவம் கழித்த மன அழுத்தம்
4. பிள்ளைக்கு இரத்தசோகை இருத்தல்
5. பிள்ளைகளின் வளர்ச்சிப்படிநிலைகளை அடைவதில் தாமதம்

 

என்ன மாதிரியான டெஸ்ட் எடுக்கப்படும்?

நம்முடைய முதலாவது பிரெனெட்டல் செக்கப் போது, நமக்கு இரத்தசோகை இருக்கிறதா என்பதை மருத்துவர் பரிசோதிப்பார். இதற்கு இரண்டு வகையான டெஸ்ட் எடுக்கப்படுகிறது.

 

ஹீமோகுளோபின் டெஸ்ட்: இதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை நம்மால் கணக்கிட முடியும். இரத்த சிகப்பு அணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதம், ஆக்சிஜனை நுரையீரலில் இருந்து உடலில் உள்ள திசுக்களுக்கு எடுத்து செல்கிறது.

ஹீமோடாக்ரிட் டெஸ்ட்: இரத்த மாதிரியில் உள்ள சிகப்பு இரத்த அணுக்கள் சதவிகிதத்தை அளவிட உதவுகிறது.

 

என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது?

1. ஒருவேளை கர்ப்பமாக இருக்கும்போது இரத்தசோகை இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தால், இரும்புச்சத்து மாத்திரை அல்லது ஃபோலிக் வைட்டமின் மாத்திரையை நம்முடைய பிரெனெட்டல் வைட்டமின்களுடன் சேர்த்துக்கொள்ள பரிந்துரைப்பர்.

2. அதேபோல இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் அடங்கிய உணவை நாம் எடுத்துக்கொள்ளவும் மருத்துவர்கள் அறிவுரை வழங்குவர்.

 

3. இவற்றை கடைப்பிடித்த பிறகு மீண்டும் நம்முடைய இரத்த மாதிரியை வைத்து அதன் சதவிகிதத்தில் முன்னேற்றங்கள் காணப்படுகிறதா என்பதை மருத்துவர்கள் பார்ப்பர்.

4. வைட்டமின் B12 குறைபாடு இருந்தால், வைட்டமின் B12 மாத்திரையை எடுத்துக்கொள்ள நம்முடைய மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்.

5. மேலும், இறைச்சி, முட்டை, பால் உற்பத்தி பொருட்களை எடுத்துக்கொள்ளவும் நம்முடைய மருத்துவர் பரிந்துரைப்பார்.

 

இரத்தசோகை வாராமல் இருக்க என்ன சாப்பிடலாம்?

 • மீன்
 • கீரை வகைகள்
 • தானிய வகைகள்
 • பீன்ஸ், பருப்பு வகைகள்
 • முட்டைகள்

 

இரத்தசோகை வாராமல் இருக்க என்ன பழங்கள் சாப்பிடலாம்?

 • சிட்ரஸ் பழங்கள் மற்றும் ஜூஸ்
 • ஸ்ட்ராபெர்ரி
 • கிவி பழங்கள்
 • தக்காளி
 • குடை மிளகாய்

 

இரத்த ஓட்டம் சீராக இருப்பது நமக்கும், நம்முடைய பிள்ளைக்கும் மிகவும் நல்லது. எப்போதும் கர்ப்பமாக இருக்கும்போது இடதுபக்கம் தூங்கவே அறிவுறுத்துவார்கள். இரத்தசோகை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது இப்போது நம்முடைய தலையாய கடமைகளில் ஒன்றாகும். காரணம், இரத்தசோகை வராமல் இருக்கும்போது பிரசவத்துக்கு பல வகையில் நமக்கு உதவுகிறது. மீண்டுமொரு பயனுள்ள பதிவில் சந்திப்போம். நன்றி, வணக்கம்.

Content Image Source: Shutterstock

#pregnancymustknow #momhealth #momnutrition
logo

Select Language

down - arrow
Personalizing BabyChakra just for you!
This may take a moment!